Skip to main content

Posts

அழைப்பிதழைப் பார்க்கவும்

Recent posts

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 30

திருவாசகமும் நானும்

சிறப்புரை : சந்தியா நட்ராஜன்

இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
மூகாம்பிகை வளாகம்
(4 லேடீஸ் தேசிகர் தெரு)
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
(சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)
தேதி 21.10.2017 (சனிக்கிழமை)
நேரம் மாலை 6 மணிக்கு
பேசுவோர் குறிப்பு : தமிழ் அறிஞர், மொழி பெயர்ப்பாளர், பதிப்பாளர்
அனைவரும் வருக, அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 79

அழகியசிங்கர்  


அடகுக் கடை


பத்மஜா நாராயணன்எல்லா அடகுக் கடையுள்ளும்
எப்போதும் ஒரு பெண்
எதையாவது அடகுவைக்க
காத்திருக்கிறாள்.
அது அவள்
புன்னகையாக நிச்சயம் இருக்காது
விற்றுவிட்ட ஒன்றை
அவள் எப்படி திருப்பிவைக்க இயலும்?
சிலநேரம்
அதிகாலையில் அடகுக்கடைக்குச்
செல்பவள்
ஏதோ ஒன்றை திருப்பத்தான்
சென்றிருப்பாள்
அப்போது அவள் தொலைத்த புன்னகையை
அக்கடைக்காரன்
கொசுறாக அவளிடம் கொடுத்துவிடுகிறான்.
மற்றோர் இரவு
மீண்டும் அங்கு வரும் வரையில்
அவள் அதை சுமந்துகொண்டு
அலைகிறாள்
எது எப்படியிருந்தும்
இரவு நேரங்களில்
அடகுக் கடை ஏகும்
பெண்களின் எண்ணிக்கை
குறையவே போவதில்லை
அவர்களின்
துயரைப் போலவே!

நன்றி : தெரிவை - கவிதைகள் - பத்மஜா நாராயணன் - மொத்தப் பக்கங்கள் : 64 - வெளியீடு : டிசம்பர் 2013 - விலை : ரூ.50 - வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிட் - 6 முனுசாமி சாலை, மேற்கு கே கே நகர், சென்னை 600 078 - தொலைபேசி : 044 - 65157525


22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் - 7

அழகியசிங்கர்


பொதுவாக இலக்கியக் கூட்டங்கள் நடத்தினால் அவற்றைப் பதிவு செய்ய வேண்டுமென்று நினைப்பேன்.  பல கூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.  காசெட் ரிக்கார்டு ப்ளேயர் மூலம் தெற்கு மாட வீதி திருவல்லிக்கேணியில் நடந்த பல கூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.  அப்படிப் பதிவு செய்யும்போது, சத்தமாக கார் ஓடும் சத்தம், ஆட்டோ சத்தம் என்று பல சத்தங்களும் பின் புலமாக பேச்சின் நடுவில் கேட்கும்.  உருப்படியாக இரண்டு கூட்டங்களின் ஆடியோவை அளித்து உள்ளேன்.  ஒன்று சுந்தர ராமசாமியின் பேச்சு.  இன்னொன்று தமிழவன் கூட்டத்தின் பேச்சு.
நான் நடத்திய கூட்டத்திலேயே சிறந்த முயற்சி அசோகமித்திரனின் இந்த ஒளி-ஒலி படம்தான்.  சிறப்பாக க்ளிக் ரவி படமெடுத்துக் கொடுத்திருக்கிறார்.  அவருக்கு நன்றி.  8 பகுதிகளாக உள்ள இதில் 6 பகுதிகளை ஏற்கனவே உங்களுக்கு அளித்து விட்டேன்.  7வது பகுதியை இப்போது அளிக்கிறேன். எல்லோரும் பார்த்து ரசிக்ýகும்படி கேட்டுக்கொள்கிறேன். 
இதேபோல் ந பிச்சமூர்த்தியின் 100வது ஆண்டு விழா ஒளிப்படமும் உள்ளது.  ஆனால் அசோகமித்திரனின் ஒளிப்படம்போல் அவ்வளவாய் சிறப்பாக வராத படம் அது. 

ஒரு நாடகத்தைப் படிக்க வேண்டுமா மேடையில் பார்க்க வேண்டுமா..........

.


அழகியசிங்கர்சமீபத்தில் என் நண்பர் ஆடிட்டர் கோவிந்தராஜன் என்னை ராமானுஜர் என்ற நாடகத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.  இந்த நாடகத்தை எழுதியவர் இந்திரா பார்த்தசாரதி.  நான் பொதுவாக நாடகமோ சினிமாவோ இப்போதெல்லாம் பார்ப்பதில்லை.  முதலில் ஒரு அரங்கத்தில் உட்கார்ந்துகொண்டு  சினிமாவையோ  நாடகத்தையோ பார்க்க முடியுமாவென்று  என்னைச் சோதித்துக் கொள்கிறேன்.  என்னால் உட்கார முடிகிறது.  ரசிக்கவும் முடிகிறது.  ஆனால் சினிமாவும் நாடகமும் என்னை சோதிக்காமல் இருக்க வேண்டும்.  நாரதகானசபாவில் ஆறாம்தேதி இந்த நாடகத்தைப் பார்த்தேன். இந்த நாடகத்தைத் தயாரித்தவர்கள் ஷரத்தா என்ற நாடகக் குழுவினர்.  நாடகத்தைப் பார்த்து அசந்து விட்டேன்.  கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட நடிகர்களைக்கொண்டு நாடகத்தை இயக்கி உள்ளார்கள். அரங்கத்தின் ஒரு மூலையில் இசை நிகழ்ச்சி நடப்பதுபோல் ஒரு குழு அமர்ந்து இசைக்க நாடகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நாடகத்தை ஜி கிருஷ்ணமுர்த்தி இயக்கி உள்ளார்.  நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் ஒன்று தோன்றியது.  இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் என்ற நாடகப் பிரதியையும் படித்து விடலாமெ…

ஏன் என்று தெரியவில்லை?

அழகியசிங்கர்
தமிழ் ஹிந்துவைப் புரட்டிப் பார்த்தேன்.  ஞ:ôனக்கூத்தன் பிறந்த நான் இன்று.  எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.  சில ஆண்டுகளுக்கு முன்.. ஞாயிற்றுக்கிழமை என்று நினைக்கிறேன்.   :ஞானக்கூத்தன் எங்களைப் பார்க்க கடற்கரைக்கு வந்திருந்தார்.  ஞானக்கூத்தன் ஒன்று சொன்னார் : "எனக்கு இன்று பிறந்த நாள்," என்று.  வாழ்த்துத் தெரிவித்தோம்.  பின் இன்னொன்றும் சொன்னார் üஇந்தப் பிறந்தநாள்போது வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னாராம்.  ஆண்டவன் இன்றுவரை உயிரோடு விட்டு வைத்திருக்கிறானாம்.  அவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமென்று.  இதைக் கேட்டவுடன் வீட்டில் உள்ளவர்கள் கலங்கி விட்டார்கள்," என்று.  அன்று முழுவதும் ஞானக்கூத்தன் சொன்னது என் ஞாபகத்தை விட்டுப் போகவில்லை.
என் அப்பா பாட்டியெல்லாம் பிறந்த நாள் கொண்டாடியதில்லை. அவர்களுக்கே தெரியாது..எப்போது பிறந்தோம் என்று..எனக்குக் கூட பல ஆண்டுகளாக பிறந்த நாள் எப்போது வருகிறது என்பது தெரியாது..உண்மையில் என் பெண்ணின் பிறந்தநாளை கொண்டாடிய பின்தான் என் பிறந்தநாள் ஞாபகம் வந்தது.  
ஒரு முறை என் பெண் பிறந்த நாளை வீட்டில் கொண்டாட கேக்கெல்லாம் வாங்கிக்கொண்டு வந்தேன். …

ஏன் இந்தக் கூட்டம்?

அழகியசிங்கர்


வழக்கம்போல் நவீன விருட்சம் 103வது இதழை எடுத்துக்கொண்டு போய் வைதீஸ்வரனிடம் கொடுத்த போது, அவர் மொத்தக் கவிதைகள் அடங்கிய தொகுப்பான மனக்குருவி என்ற கவிதைத் தொகுதியை என்னிடம் நீட்டினார்.  திரும்பத் திரும்ப அவர் முன் அப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன்.  பல ஓவியங்களுடன் 366 கவிதைகள் அடங்கிய தொகுப்பு அது.
சனிக்கிழமை வைதீஸ்வரன் சிட்னி செல்கிறார்.  திரும்பி வர இரண்டு மூன்று மாதங்கள் மேல் ஆகும்.  உடனே எனக்குத் தோன்றியது, இப் புத்தகத்தை எல்லோருக்கும் அறிமுகப் படுத்தி கவிதைகள் வாசிப்பது என்று.   இக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு டாக்டரிடம் கேட்டுக் கொண்டேன். டாக்டரும் கூட்டம் ஏற்பாடு செய்ய தயாராய் இருந்தார்.  இந்தத் தருணத்தில்தான் புத்தகம் கொண்டு வந்த பதிப்பாளர் லதாவால் கலந்துகொள்ள முடியாது என்று தெரிந்தது.  
லதா வர முடியவில்û9ல என்றால் கூட்டம் நடத்த வேண்டாமென்று தோன்றியது.  தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன்  வைதீஸ்வரனைப் பார்த்துவிட்டு கூட்டம் நடத்தாமல் விட்டுவிடலாமென்று தோன்றியது.  திங்கள் கிழமை கிருபானந்தன் எனக்கு போன் செய்து, எப்படியாவது வைதீஸ்வரன் கூட்டத்தை நீங்கள் நடத்த வேண்டுமென்ற…