Skip to main content

ஆட்டிப்படைக்கும் உடல்




தமிழில் : அழகியசிங்கர்


கேள்வி : மஹாராஜ், நீங்கள் என் முன்னால் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்॥ நான் உங்கள் அருகில் காலடியில் அமர்ந்திருக்கிறேன்। நம் இருவருக்குமிடையில் என்ன அடிப்படையான வித்தியாசம் இருக்கிறது?


மஹாராஜ் : எந்த அடிப்படையான வித்தியாசமும் இல்லை।


கேள்வி : உண்மையில் சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன। நான் உங்களைத் தேடி வருகிறேன்॥ நீங்கள் என்னைப் பார்க்க வருவதில்லை।


மஹாராஜ் : ஏனெனில் நீங்கள் வித்தியாசமாக இருப்பதாகக் கற்பனை செய்கிறீர்கள்। மிகச் சிறந்த மனிதர்களைத் தேடி நீங்கள் இங்கேயும் அங்கேயும் செல்கிறீர்கள்।


கேள்வி : நீங்கள் கூட ஒரு சிறந்த மனிதர்। உண்மையை அறிவதற்குத் தகுதி உடையவர்। நான் அதுமாதிரி இல்லை।


மஹாராஜ் : உங்களுக்கு ஒன்றும் தெரியாதென்றும் அதனால் தாழ்வு மனப்பான்மை கொண்டவரென்றும் எப்பவாவது சொல்லியிருக்கிறேனா? அப்படி வித்தியாசத்தைக் கண்டிபிடிப்பவர்கள் அதை நிரூபிக்கட்டும்। உங்களுக்கு என்ன தெரியாதென்பதை நான் சொல்வதில்லை। பார்க்கப்போனால், உங்களுக்குத் தெரிந்ததைவிட குறைவாக எனக்குத் தெரியும்।


கேள்வி : உங்கள் வார்த்தைகள் புத்திசாலித்தனமானவை। உங்கள் நடத்தை போற்றுதற்குரியது। உங்கள் கருணை மிகச் சக்தி வாய்ந்தது।


மஹாராஜ் : எனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது। உங்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை। என்னுடைய வாழ்க்கை பல சம்பவங்களின் கோர்வை, உங்களைப் போல। ஆனால், நான் எல்லாவற்றையும் துண்டித்துவிட்டு ஒரு பார்வையாளனைப் போல பார்க்கிறேன்। ஆனால் நீங்களோ அதனுடன் ஒன்றி உள்ளீர்கள்। அதனுடன் உழன்று கொண்டிருக்கிறீர்கள்।


கேள்வி : எது உங்களை இப்படி ஒரு பார்வையாளனாக மாற்றியது?


மஹாராஜ் : குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றுமில்லை। அது தானாகவே நிகழ்ந்துள்ளது। நான் என் குருவை நம்பினேன்। அவர் என்னிடம் கூறினார்: 'நீ ஒன்றுமில்லை। உன்னுடைய ஆத்மா' என்று। நானும் அவரை நம்பினேன்। என்னுடையது எது, என்னுடையது எது இல்லை என்பதைப் பற்றிய அக்கறையை விட்டுவிட்டேன்।


கேள்வி : உங்கள் குருவை நீங்கள் முழுமையாக நம்பிய அதிர்ஷ்டக்காரர், நீங்கள்। ஆனால் எங்கள் நம்பிக்கை வெறும் வார்த்தைகள்। பெயரளவானது


மஹாராஜ் : யார் அதைச் சொல்வது? இது தானாகவே நிகழ்வது। எந்தவிதமான செயல் நோக்கம் இல்லாமல் நடக்கிறது। யாருக்கு யார் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை। என்னைப் பற்றிய உயர்ந்த கருத்து உங்கள் கருத்து மட்டுமே? எந்தத் தருணத்திலும் நீóங்கள் அதை மாற்றிக்கொண்டு விடலாம்। எதற்காக கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்। உங்களுடையதாக இருந்தாலும் கூட।


கேள்வி : இன்னும்கூட நீங்கள் வித்தியாசமானவர்। உங்கள் மனது எப்போதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கக் கூடியது। எப்போதும் அதிசயங்கள் உங்களைச் சுற்றி நடந்தவண்ணம் உள்ளன।


மஹாராஜ் : எனக்கும் அதிசயங்கள் பற்றி ஒன்றும் தெரியாது। நான் ஆச்சரியப்படுவேன்। இயற்கை தன் விதிகளில் சில சலுகைகளைத் அளிக்குமாவென்பதைப் பற்றி। நாம் இதை ஒப்புக்கொள்ளும்வரை, ஒவ்வொன்றும் அதிசயமாகத்தான் இருக்கிறது। மனதின் விழிப்பு நிலையில் எல்லாம் நிகழந்தவண்ணம் உள்ளது। இது சாதாரணமானது। எல்லோருடைய அனுபவத்திலும் நிகழக்கூடியது। நீங்கள் அதை ஜாக்கிரதையாகப் பார்க்க தவற விடுகிறீர்கள்। நன்றாக உற்றுப் பாருங்கள், நான் பார்ப்பதை நீங்களும் பார்க்கலாம்।


கேள்வி : நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்?


மஹாராஜ் : நீங்கள் இங்கே இப்போது என்ன பார்க்க முடியுமோ அதையே நானும் பார்க்கிறேன்। ஆனால் நீங்கள் தவறாகப் பார்க்கும் உங்கள் கண்ணோட்டத்தில் அல்லாமல்। நீங்கள் உங்களைப் பார்ப்பதில்லை. உங்கள் மனம் எப்போதும் பொருள்களைக் குறித்தும், உங்களைச் சுற்றி உள்ளவர்களைக் குறித்தும், கருத்துக்களைக் குறித்தும் உள்ளது. உங்களைக் குறித்து எந்தக் கவனமும் இருப்பதில்லை. உங்களைக் குறித்து கவனத்தைக் கொண்டுவாருங்கள். உங்கள் இருப்பை குறித்து புரிந்து கொள்வீர்கள். பாருங்கள் எப்படி நீங்கள் செயல் படுகிறீர்கள் என்பதை. கவனியுங்கள் உங்களுடைய செயல்களுக்கு எந்த அர்த்ததின் அடிப்படையில் உள்ளது என்பதை. உங்களை அறியாமல் நீங்கள் ஏற்படுத்திக்கொண்ட சிறையை உற்று கவனியுங்கள். நீங்கள் எப்படி இல்லை என்பதை உணர்ந்து கொள்ளும்போது, நீங்கள் உங்களைத் தெரிந்து கொள்வீர்கள். உங்களை நோக்கிச் செல்வதற்கு, உங்களை மறுத்தும், விலக்கியும் நீங்கள் பார்க்கவேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம். உண்மை கற்பனையானதல்ல. அது மனதின் கற்பிதமும் இல்லை. அது சிலவற்றை குறிப்பதாக இருந்தாலும், 'நான்தான்' என்கிற உணர்வு தொடர்ச்சியானதல்ல. அது எங்கே பார்க்க வேண்டுமென்பதை மட்டும் சொல்லக் கூடும். எதைப் பார்க்க வேண்டுமென்பதைச் சொல்லாது. அதனால் நல்ல பார்வையை அதனிடம் செலுத்துங்கள். உங்களைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களென்றால், நீங்களே உங்களை உணர்வீர்கள். அப்போது 'நான்தான்' என்பதற்கான தேவை எதுவும் ஏற்படாது. அதனால் நீங்கள் உங்களைப் பற்றிய எதுவும் வார்த்தைகளால் சொல்லிக்கொண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் உடனடியாகக் கருத்தில் கொள்ளவேண்டியதென்னவென்றால், உங்களைப் பற்றிய எண்ணத்தை அகற்றுவதுதான். எல்லாவிதமான விவரணைகளும் உங்களை உடலைப் பற்றியதுதான், அது குறித்த கருத்துக்களுக்குத்தான். உடலைக்குறித்த உங்கள் தீவிரம் போய்விட்டால், தானாகவே நீங்கள் இயல்பான நிலைக்கு வந்து விடுவீர்கள். உங்களுக்கும் எனக்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால், நான் என்னுடைய இயல்பான நிலையை உணருகிறேன். நீங்கள் உணருவதில்லை. தங்கத்திலிருந்து உருவாக்கப்படும் ஆபரணங்கள் இருக்கும்போது, தங்கத் துகிளால் எந்தப் பலனுமில்லை, என்பதை மனம் ஏற்றுக்கொள்வதைப் பொருத்தது. அதேபோல் நாமெல்லாம் ஒன்று -தோற்றத்தைத் தவிர. நாம் இதைக் கண்டுபிடிக்க வேண்டும், ஆராய வேண்டும், தினமும் ஒவ்வொரு நிமிடமும் கேள்விக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையை முழுவதும் செலுத்திய வண்ணம்.


















Comments

Babu Akkandi said…
Good One. Thanks for sharing with us, when i search "Nisargadatta Maharaj" discussion in tamil, i found this wonderful site. Thanks