Skip to main content

Posts

Showing posts from January, 2009

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

நவீன விருட்சம் இதழில் பல மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் பிரசுரமாகி உள்ளன. அவற்றைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வரும் எண்ணம் உள்ளது. சில கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நார்மன் மேக்கே கவிஞன் சம்பவங்கள் அவனை நெருக்கடியான நிலையில் தள்ளித் துன்புறுத்தின. வறுமை, சமூகம், நோய் - எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவனைத் தாக்கின. அவற்றால் அவனை மெளனமாக்க முடியவில்லை. கல்லெறிபட்ட காக்கை முன்பு ஒரு போதும் நினைத்தேயிராத வகையில் எல்லாம் தப்பிப் பிழைக்க வழிகாண்பது போல முன்னைவிட மேலும் பல கவிதைகள் அவன் எழுதினான் எல்லாம் வெவ்வேறாக இப்போது சிரமமில்லாது சமநிலையில் பறப்பதைத் தொடருமுன் மக்களின் தலைகளுக்கு மேலே அவர்கள் வீசியெறியும் கற்கள் தன்மீது படாத உயரத்தில் சில சமயங்களில் திடீர் என அவன் தடுமாறுகிறான். தடைப்பட்டு நிற்கிறான். பக்கவாட்டில் சுழல்கிறான் இதில் என்ன ஆச்சரியம்!.... மூலம் : ஆங்கிலம் தமிழில் : கன்னி ( நார்மன் மேக்கே ஒரு பிரபல ஸ்காட்லாந்து கவிஞர். தனது 75வது வயதில் 26.02.1986 ல் காலமான இவர் 13 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். இத் தொகுதிகளிலிருந்து பல கவிதைகளும் இதுவரை வெளியிடாதிருந்த

23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும் / 3வது பகுதி

கடந்த 11 நாட்கள் 23வது புத்தகக் காட்சி ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. கூட்டமோ கூட்டம். ஆனால் எல்லாக் கூட்டமும் எதுமாதிரியான புத்தகம் வாங்குகிறது, எங்கே போகிறது என்பது தெரியவில்லை. என் புத்தக அரங்கில் என் புத்தகங்களை கடை விரித்தவுடன், புதுப்புனல் ரவி உடனே அவருடைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். ஈரோடிலிருந்து கெளதம சித்தார்த்தான் இரண்டு பெரிய போஸ்டர்களை எடுத்து ஒட்டி போஸ்டர் கீழே அவருடைய இரு புத்தகங்கள். பொதுவாக நவீன விருட்சம் புத்தகம் மட்டும் வைத்துக்கொண்டு கடை போட முடியாது. எல்லாரிடமிருந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு புத்தக பிஸினஸ் நடத்த முடியும். மேலும் விருட்சம் புத்தகம் 2 ராக் முழுவதும் போதும். தானாகவே பல சிறு பத்திரிகைகள் அரங்கை நிரப்பின. செந்தூரம் ஜெகதீஷ் அவருடைய செந்தூரம் பத்திரிகை, கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வந்தார். அதே போல் சங்கர ராம சுப்பிரமணியனின் கவிதைப் புத்தகம். அவருடைய சிறுபத்திரிகை. வருடத்திற்கு ஒருமுறை புத்தகக் காட்சி போது மயிலாடுதுறையிலிருந்து வரும் காளான் பத்திரிகையைச் சந்திப்பதுண்டு. போன ஆண்டு ஆரம்பமான பிரம்மராஜன் பத்திரிகையான நான்காம் பாதை என்ற பத்திரிகை

2 கவிதைகள்

தாய்ப் பாசம் புத்திர வாஞ்சை அமிதமாகிவிட்டால் கூனியின் சொல்தானா தாரகை மந்திரம் மூத்தவன் அவதாரமாயினும் வெறும் சக்களத்தி மகன் கொண்ட கணவன் பார் புகழும் நல்லரசனின் மரணம் கூட திரணமாய் தோன்றிடுமோ சீதாயணம் மாயமான்களின் கவர்ச்சி லீலைகளின் பின்னால் செல்லும் லௌகிக நெஞ்சங்கள் கொண்டவன் அவதாரபுருஷனாகலாம் நாலும் தெரிந்த புருஷோத்தமனாகலாம் இருந்தும் 'மான் அன்று அது மாயமே' என சோதரர்கள் வாக்குக்கு 'இவ்வாறு இருத்தல் இயலாதோ' என தன் சித்தத்தை குளிர்விக்க மாய மான்களின் வேட்டைக்கு விரைந்து செல்ல பதியைத் தூண்டிடும் பத்தினிக் கோலங்கள்தான் இன்றும் மாய மான்களின் கபட ஓலங்களின் சூழ்ச்சிக்குறி அறியாது வீண்பழிக்கு ஆளாக்கி நலம்நாடிகளை விரட்டியடித்து இலக்குவக் கோடுகளையும் தாண்டி வந்து யுத்தகாண்டத்திற்கு வழிவகுக்கும் கோமளாங்கிகள்

23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும் 2

ஆரம்பகாலம் முதல் எனக்கும் புத்தகக் காட்சிக்கும் தொடர்பு உண்டு. அப்போது புத்தகங்களை சாக்கு மூட்டையில் நிரப்பி தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து ஒவ்வொரு கடையாகப் பார்த்து என் புத்தகங்களைக் கொடுத்துவிட்டுப் போவேன். ஒருமுறை நகுலனின் இருநீண்ட கவிதைத் தொகுதியையும். உமாபதியின் வெளியிலிருந்து வந்தவன் தொகுதியையும் அன்னம் கடையில் கொடுத்திருந்தேன். அந்த முறை புத்தகக் காட்சியில் தீ பிடித்து எரிந்து பல புத்தகங்கள் சாம்பலாகி விட்டன. என் புத்தகங்களை புத்தகக் காட்சியில் தனியாக ஸ்டால் பிடித்து வைப்பதற்கு ஏற்ற எண்ணிக்கையில் இல்லை என்பது எனக்கு எப்போதும் தெரியும். வேற பதிப்பாளர் புத்தகங்களையும் கொண்டு வந்தால்தான் புத்தகம் விற்று ஆகும் செலவை ஈடுகட்டமுடியும். நான் முதன் முறை ஒரு ஸ்டால் போடும்போது மினி ஸ்டால்தான் கிடைத்தது. அதில் எல்லாப் புத்தகங்களையும் வாங்கி வைத்துக்கொண்டு 80000 வரை விற்றேன். அதுவே ஒரு மினி ஸ்டாலில் விற்ற அதிகத் தொகை என்று நினைக்கிறேன். எனக்கு அப்போது வந்திருந்து உதவி செய்த நண்பர்களை மறக்க முடியாது. 11 நாட்கள் இருந்து உதவி செய்ததோடல்லாமல் எந்தவிதமான பிரதிபலனும் என்னிடமிருந்து அவர்கள் எ

23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும்

ஜனவரி மாதத்திலிருந்து என் பரபரப்பு அதிகமாகிவிட்டது. நான் நினைத்தபடியே மூன்று புத்தகங்கள் கொண்டு வர எண்ணினேன். கடைசி நிமிடம் வரை பணம் ஒரு பிரச்சினையாக இருக்கும்போல் தோன்றியது. ஆனால் ஓரளவு Festival Advance பணமும், Medical Aid பணமும் என்னைக் காப்பாற்றி விட்டது. நான் எதிர்பார்த்தபடி 3 புத்தகங்களும் நல்லமுறையில் பிரசுரமாகிவிட்டன. இந்த முறை திருப்திகரமாக 3 புத்தகங்களும் அமைந்துவிட்டன. ஸ்டெல்லா புரூஸ் நவீன விருட்சத்தில் எழுதிய கட்டுரைகளையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகம். அப்புத்தகம் பெயர் 'என் நண்பர் ஆத்மாநாம்'. தொடர்ந்து நவீன விருட்சம் எழுதிக்கொண்டு வரும் அசோகமித்திரன் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. அவருடைய புத்கதம் ஒன்றுகூட நவீன விருட்சம் வெளியீடாக வரவில்லை. அவருடைய புத்தகம் ஒன்று கொண்டு வர வேண்டுமென்று 'உரையாடல்கள்' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன். மூன்றாவதாக காசியபன். அவருடைய 'அசடு' நாவலை எப்போது வேண்டுமானாலும் திரும்பவும் எடுத்து வாசிக்கலாம். அதை 3வது பதிப்பாகக் கொண்டு வந்துள்ளேன். ஆனால் மற்ற அரங்குகளைப் பார்க்கும்போது என் பிரமிப்பு கொஞ்சம்கூட குறையவில