Skip to main content

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்





எம் கோவிந்தன்


நானும் சைத்தானும்


தேவனுக்குரியதை தேவனுக்கும்


தேசத்திற்குரியதை அதற்கும்


தர நான் முன் வந்தபோது


யாரோ என் முன் வந்து சொன்னான்


'எனக்குரியதை கொடு'


'யார் நீ' என்றேன்


'தெரியாதோ சைத்தானை' என்றான்


'கேட்டுக்கொள்


என்னுடையவை எல்லாம் எனக்குத்தான்


என்பதே இன்றுமுதல் என் வேதம்' என்றேன்


சைத்தான் உரக்க சிரித்தான்


என்னை சிக்கென்று கட்டிப் பிடித்தான்


செவியில் மெல்ல சொன்னான்


'எனக்கு வேண்டியதைத்தான்


தந்தாய், நன்றி'


(மலையாள அறிஞர், கவிஞர் எம் என் ராயின் பிரதான மாணவராக அறிவுத்துறையிலும் மலையாள மொழியின் திராவிட மயமாக்குதலை தொடங்கி வைத்தவர் என்ற நிலையில் இலக்கியத்திலும் முன்னோடியாக திகழ்ந்தவர்)


மொழிபெயர்ப்பு : ஜெயமோகன்



நவீன விருட்சம் இதழ் 5 - JULY - SEPTEMBER 1989




Comments