Skip to main content

அக்கரையில் நின்று கொண்டு

கார் நனையாமலிருக்க
கவர் போட்டு விட்டு
திரும்பினேன்

ஒரு கிழவர்
அரைகுறை வேட்டியோடு
சட்டை இல்லாமல்
மழையில் நனைந்தவாறு
பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்

ஓடிப்போய் என் பழைய
சட்டையொன்றை எடுத்து வந்து
அவரை கூப்பிட்டேன்

அதெல்லாம் வேணாம் தம்பி
சோறு கொஞ்சம் போடேன்....
என்று
வயிற்றை தடவினார் கிழவர்...!

Comments

பிரசுரம் ஆக செய்ததற்கு நன்றி
- ரா. கணேஷ்.
கவிதையின் தலைப்பும், முத‌ல் மூன்று வரிகளுக்குமான தொடர்பும் அருமை
தங்கள் கருத்துக்கு
நன்றி விநாயகமுருகன்.

- ரா. கணேஷ்