Skip to main content

" விண்ணைதண்டி வருவாயா "

இந்த படத்தை பார்த்து கிட்ட திட்டஒரு மாதம் ஆகி விட்டது , இதை பற்றி, கேட்ட வரையிலும் சரி, நெட்டில் படித்த வரையிலும் , ஆஹா ஓஹோஎன்றுதான் கேள்வி! (எதாவது மிஸ் ஆகிருக்கும் !)

படம் ஆரம்பிக்கும் பொழுதே சிம்பு பின்னணியில் பேச ( அனேகமாக கௌதம் படங்களில் இது பொதுவகிவிட்டது ) வாரனம் ஆயிரம் பாகம் இரண்டோ என்று தோன்ற ஆரம்பித்தது, இதை எதோ Latest Trend என்று, ஒரு விமர்சகர் சிலகிதிருந்தார் .

கிட்ட திட்ட 75 ஆண்டுகள் கழிந்தும் நமக்கு , சினிமா என்ற கலைவடிவம் பிடிபடவில்லையோ என்று தோன்றுகிறது. காட்டி உணர்த்த வேண்டியதை பின்னணியில் நீண்ட விளக்க உரை கொடுக்க நேர்ந்தால் அதை சினிமாவின் தோல்வி என்றே எண்ண தோன்றுகிறது.

மீண்டும் சளைக்காத காதல். (என் நண்பன் ஒருவன் இந்த படத்தை லவ் பன்ன ஒருவரால்தான் ரசிக்க முடியும் என்ற விளக்கம் கொடுத்தான்) . எனக்கு இதில் ஒரு வியாபார சூட்சமம் முக்கியமாகபடுகிறது, இன்று திரைக்கு சென்று சினிமா பார்பவர்கள் 15-35 வயதினர், இவர்களுக்கு காதலை வித்தியாசமாக சொன்னால் படம் ஹிட் !

எனக்கு இது போன்ற படங்களில் முதலில் இருந்தே இதன் யதார்த்த தன்மை பற்றிய கேள்விகள் தோன்ற ஆரம்பித்து விடுவதால் படத்தின் உள்ளே புகமுடியவில்லை (அல்லது படத்துடன் பயணிக்க முடியவில்லை)

உதாரணங்கள் ௧) பட்டம் பெற்ற ஒரு இளைஞனது எதிர்காலம் பற்றிய கவலையை கவனமாக தவிர்த்திருக்கிறார் (அவனும் சரி அவனது குடும்பமும் சரி ), ஒரு உயர் மத்திய தர குடும்பத்தில் எவ்வளவு துரம் சாத்தியம் என்று தெரியவில்லை . அதே போல அவனது குடும்பத்தில் அவனது காதலை எதிர் கொள்ளும் விதமும் சாத்தியமா? ௨)ஒரு பெண் ,ஒரு வாலிபனை, தொடர்ந்து பார்த்தாலோ அல்லது பேசினாலோ அந்த பெண் காதலித்தே ஆக வேண்டும்,(அல்லது காதலித்து இருக்க வேண்டும்) .கிட்ட திட்ட அந்த கதாநாயகி , காதலிக்க கட்டயபடுத்த பட்டிருக்கிறார் . இது தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்கிறது, (இதற்கு எதிர் விதமாக ஆண் பெண் நட்பை பற்றிய குப்பைகள் ,தாங்க முடியாதவை என்பதை ஒத்து கொள்கிறேன் ) ௩) " ****ing" என்று கத்துதல் தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்று கெளதம் முடிவு செய்துவிட்டார். இந்த வார்த்தை corporate உலகத்தில் சகஜமாக இருக்கலாம் , தயவு செய்து நமது குடும்பத்திற்குள் சகஜமாக்கிவிடாதிர்கள் கெளதம் !( இந்த குறிப்பை குறியீடாக கொள்ளவும் ) படத்தில் நான் ரசித்த காட்சி : சிம்பு ஆலப்புழ காவல் நிலையத்தில் " சார் Jessi கல்யாணத்தை நிறுத்திட்டா சார் ! " unexpected and great expressionஆனாலும் படம் வணிகரீதியாக வெற்றி கௌதமின் வெற்றியே, சினிமாவின் வெற்றியா?

பிகு : தமிழ்நாடு அனேகமாக ஒரு கும்பத்தின்கீழ் அடிமையகிவிட்டதோ என்று தோன்றுகிறது மீடியா என்றால் அவர்கள் (டிவி,ரேடியோ பேப்பர்...)அரசியலை பற்றி கேட்கவே வேண்டாம் , தமிழ்நாடு ஏற்கனவே இரண்டாக பிரிக்கப்பட்டுவிட்டது தற்போது சினிமாவும் ,ஒன்று அவர்கள் தயாரிக்கிறார்கள் , இல்லை விநியோகம் செய்கிறார்கள் , அதுவும் இல்லை என்றல் டிவி உரிமையை பெற்றுவிடுகிறார்கள், ரஜினியே நடுங்கும் பொழுது ...... ஒருகால் பரமேஸ்வரன் திருவாருரை தன்னுடைய ஊராக சொன்னது { சுந்தரமூர்த்தி நாயனாரின் புராணத்தில் } -" உலகம் யாவையும் " என்று பொருள் கொண்டார்களோ ! { கம்ப ராமாயண முதல் செய்யுளின் மூலம்}

Comments