Skip to main content

Two poems

தலைமுறைகள் தாண்டிய பாட்டு

பூவுடன் இணைந்த மணம் போல்

அழகுடன் கமழ்ந்த திறனால்

களபலியான தங்கம்மையே தாயம்மையே

அந்தப்புரம் அழைத்து

அறநெறி தவறிய

கொற்றவனின் கொடும் நீதியில்

குமுறிக் கொந்தளித்து

பிறவி அளித்த அன்னை மண்ணிலேயே

கன்னிகழியா கண்மணிகள் உம்மிருவரை

உயிருடன் கரைத்துவிட்டு

மலையும் மடுவும் தாண்டி

நதியும் கரையும் கடந்து

தெற்குத் தெற்கொரு தேசமாம்

பசுமைசூழ் வள்ளியாற்றங்கரை

இரணியல் வந்து

எங்களுடன் பயணித்த

சிங்க விநாயகரையும்

அவர் பார்வையிலேயே

ஒடுப்பறையில் நாகரம்மனையும்

நாகரம்மன் சன்னிதியில்

தங்கம்மை தாயம்மை

உம்மிருவரையும் குடிவைத்தோம்

கும்பிட்டோம

தலைமுறை தலைமுறைதாண்டிவந்து

பகைமறந்து மன்னித்து

பாரிடமெங்கணும்

மாதர்குல நீதிகள்

செழித்தோங்கிட

பொங்கலிட்டோம் குரவையிட்டோம்

வாழ்த்துறோம் வணங்குறோம



காமிரா கண்


முதுமையிலும் இனிமை காண

உறுப்புக்கள் ஒத்துழைக்காதிருந்தும்

வயதேறுவதை பொருட்ப்படுத்தாமல்

இளமை மிடுக்கை மனதில் மேயவிட்டு

வாழ முயன்றுகொண்டிருக்கையில்

குறிப்பிட்ட கோணங்களில்

அடிக்கடி படமெடுத்து

பத்திரிகைகளில் போட்டு

படுகிழமென்று பகிரங்கப்படுத்தும்

காமிராக்காரர்களுக்கு தெரிவிக்கவேண்டியது

நன்றியா எதிர்ச்சொல்லா

Comments