Skip to main content

Posts

Showing posts from February, 2011

எதையாவது சொல்லட்டுமா........38

க.நா.சு நூற்றாண்டை ஒட்டி நான் ஒன்று செய்தேன். ஒரு காலத்தில், மையம் ராஜகோபால், ஸ்ரீனிவாஸன், ஆனந்த் மூலம் கொண்டு வந்த க.நா.சு கவிதைகளை திரும்பவும் கொண்டு வந்தேன். 1986 ல் அது வந்தபோது, க.நா.சு நிகழ்த்திய உரை இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. க.நா.சு கவிதை எழுதுவதில் தெளிவாகவே தன் கோட்பாட்டை வகுத்திருந்தார். கவிதையை உரைநடை வழியாகக் கொண்டு வருவதில் புரட்சியே செய்திருந்தார். இந்தப் புத்தகம் 1000 பிரதிகள் அச்சிட்டேன். மொத்தம் 32 பக்கம் அட்டையுடன் சேர்த்து. சேகர் ஆப்செட்டில் கொடுத்துவிட்டு 1000 பிரதிகள் வேண்டும் என்றேன். இப்புத்தகத்தை புத்தகக் கண்காட்சி போதே அடிக்க மறந்துவிட்டேன். முடியவில்லை. அச்சடித்திருந்தால், அதை எல்லோருக்கும் கொடுப்பதற்கு கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும். அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை திருவல்லிக்கேணி போய் ஆட்டோ வில் புத்தகக் கட்டை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். பின் வீட்டில் பெஞ்ச் மீது அதை வைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக புத்தகக் கட்டைப் பிரித்து அதில் உள்ள புத்தகங்களை எடுத்துக்கொண்டேன். மகத்தான க.நா.சு போன்ற ஒரு கவிஞரைப் பற்றி இன்னொரு கவிஞருக்குத்தான் தெரியும்போல் தோன்றுக

எது கவிதை........2

ஓய்வுபெற்ற என் அலுவலக மேலதிகாரி ஒருவர் தமிழில் புலமை வாய்ந்தவர். சரளமாக இலக்கணத்துடன் கவிதை எழுதுபவர். ரொம்ப கஷ்டமான அரவிந்தரின் Perseus the Deliverer என்ற நாடகத்தை தமிழில் கவிதை வடிவமாக 286 பக்கங்கள் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். கவிதையாக அந் நாடகம் தமிழில் வெளிவந்துள்ளது. அப்புத்தகத்தைப் பார்க்கும்போது எனக்கு திகைப்பாக இருந்தது. பின் அப்புத்தகத்தைப் படிக்கும்படி கேட்டபோது எனக்குப் பிரச்சினையாகப் போய்விட்டது. எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது ஒரு பக்கம். அதை என்னால் படிக்க முடியவில்லை என்பது சங்கடமாகப் போய்விட்டது. அப்புத்தகத்தை என்னால் படிக்கவே முடியவில்லை. ஏன்? கவிதையின் புது வடிவம் பிறந்தபிறகு பழைய மரபெல்லாம் போய்விட்டது. ஆனால் இன்னும் பலபேர் பழைய மரபிலேயே கவிதை எழுதிக்கொண்டு போகிறார்கள். அமுதசுரபி என்ற பத்திரிகையில் இன்னும் வெண்பா போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதுமாதிரியான கவிதைகளில் பெரும்பாலும் அதை அமைக்கும் முறையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதால் சாராம்சம் போய்விடும். பின் நீண்ட கவிதை. என்னால் நீண்ட கவிதைகளைப் படிக்கவே முடியவில்லை. கவிதையை நாடகமாக எழுதிப் பட

அன்புடையீர்,

வணக்கம். க.நா.சு நூற்றாண்டை முன்னிட்டு 'சில க.நா.சு கவிதைகள்' என்ற 24 பக்கம் புத்தகம் ஒன்றை தயாரித்துள்ளேன். அப் புத்தகத்தை இலவசமாக அளித்து வருகிறேன். வேண்டுவோர் முகவரியுடன் ஒரு கார்டு நவீன விருட்சம், 6/5 போஸ்டல் காலனி முதல் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33 என்ற முகவரிக்கு அனுப்பினால் போதும். புத்தகம் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் அழகியசிங்கர்

எதையாவது சொல்லட்டுமா........37

உங்களுக்கு எதாவது சந்தேகம் வந்துள்ளதா கடவுளைப் பற்றி. பலர் கோயிலுக்குப் போவார்கள். சாமியைக் கும்பிடுவார்கள். அவ்வளவுதான். சாமியைப் பெரிய சக்தியாக நினைத்து கோயில் கோயிலாகச் செல்பவர்களும் உண்டு. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராய்ச்சியெல்லாம் இப்போதெல்லாம் யாரும் பண்ணுவது இல்லை. ஏனென்றால் அது தேவையில்லாத ஒன்று. அன்று சனிக்கிழமை. சீர்காழியிலிருந்து மயிலாடுதுறைக்கு நான் டூ வீலரில் வந்து கொண்டிருந்தேன். என் பின்னால் கிளை மேலாளரும் வந்து கொண்டிருந்தார். அவருக்குக் கோயில் போவது, கடவுளை எதற்காவது வேண்டிக்கொள்வது என்பதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. நம்பவும் நம்ப மாட்டார். ஆனால் இது ஒரு பிரச்சினையே இல்லை. ஆனால் அவர் ஒரு கேள்வி கேட்கிறார். 'இப்போதெல்லாம் கடவுள் நம்பிக்கை மக்களிடம் அதிகமாகிவிட்டது போலிருக்கிறதே' என்று. எனக்கு இதைப் பற்றியெல்லாம் அதிகமாக யோசித்து விட்டுவிட்டேன். இப்போதெல்லாம் அதிகமாக யோசிப்பது இல்லை. ஆனாலும் அவர் கேட்டார் என்பதற்கு பதில் சொல்லத் தோன்றியது. 'ஆமாம். கடவுள் நம்பிக்கை அதிகமாகி விட்டது,' என்றேன். பின் காரணமும் சொன்னேன். 'பல மக்கள

புத்தகப் பைத்தியம்

எனக்கு புத்தகமென்றால் பைத்தியம். என் மனைவிக்கு புத்தகத்தைக் கண்டாலே பைத்தியம். என் மாமனார் சொன்னார் சீ பைத்தியக்காரி இதையெல்லாம் பெரிது படுத்தாதே. புத்தகப் புழுவோடு புக்ககம் போயிருக்கிறாயென பெருமைப்படு என்றார் என் மனைவியிடம். அதற்குள் என் கைப்பிள்ளை ஊர்ந்து ஊர்ந்து புத்தகத்தைப் பிய்த்து கிழித்துக் கொண்டிருந்தான் நான் படிக்காதப் பக்கங்களை... கிழித்து கசக்கிய பக்கங்களால் ஒரு பூச்சியைப் பிடித்து வெளியே எறிந்தார் என் மாமியார் புதிதாக ஒரு புத்தகத்தைப் படித்த திருப்தி எனக்கு.

அழகிய வீரர்கள்

மிகக் கவனமாக கீழிருந்து ஆரம்பித்து மெல்லத் தோள் வரைக்கும் தோழமையாய் தொடர்ந்து தலை தடவி சாதுரியமாய் மூளை புகுந்து அரவணைத்தது சாட்டை புதுப் பம்பரத்தை இறுக்கமாக.. அணைப்பின் கதகதப்பில் கிடைத்த பாதுகாப்பு உணர்வில் சிலிர்த்துப் பரவசமாகிய பச்சிளம் பம்பரம் களத்தில் இறங்கத் தயாரானது துடிப்பாக.. இலாவகமாய் இழுத்துவிட்ட கயிறு விலகி நின்று வேடிக்கை பார்க்க வீரியமாய் சுழலாயிற்று தன் வசீகரத்தில் தானே மயங்கி பார்ப்பவர் வியக்கும் வண்ணமாக.. விசை குறைந்து சாயும்முன் உடனுக்குடன் தூக்கி உச்சிமுகர்ந்து பாராட்டி ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ’அழகியவீரன் நீ’யென ஆர்ப்பரித்து அனுப்புகின்ற சாட்டையைத் துதிக்கின்ற விசுவாசியாக.. காலமுள் சிரித்தபடி நகர கயிற்றின் கணக்குகள் புரியாமல் ஆடியோடியதில் கூர்முனை மழுங்கி வண்ணங்கள் சோபை இழக்க வனப்பைத் தொலைத்துத் தோற்கத் தொடங்கியது பம்பரம் சபையிலே தள்ளாடி.. மழுங்கிய முனைக்கு மருத்துவம் செய்யும் முனைப்போ அதுவரையிலும் பெற்ற உழைப்புக்கு இரங்கும் மனமோ எப்போதும் கொண்டிராத சாட்டை வேறு பளபளத்த பம்பரங்கள் தேடி.. இக்கணத்திலும் வட்டமிடும் பருந்துகளாய் வான்வெளியை நிறைத்து பசியோடு கருநாகச் சாட்ட

கவியோகி

சின்ன விஷயங்களுக்கெல்லாம் அமிதமாய் உணர்ச்சிகளை விரையம் செய்வதைக் கண்டு கவிதை எழுதத்தூண்டினார் எழுத்தை ஆள்கிறவர் கவிதைகள் எழுத எழுத உணர்வுகள் உணர்ச்சிகள் மேலும் கூர்மைபெற்றன முறுக்கேறின உக்கிரம் கொண்டன உணர்ச்சிகளின் உளறல்கள் என்றுரைத்து யோகத்தில் சித்தத்தைச்செலுத்த பணித்தார் யோகி யோகத்தில் முழுக முழுக உரம் பெற்ற ஆன்ம பலத்துடன் உணர்வுகளும் ஊக்கம் பெற்றன மிச்ச நாட்களின் நகர்தலில் முற்றிலும் சமனம் அடையா உணர்ச்சிகள் உணர்தல்களின் கூட சேர்ந்துகொண்ட கவிதையும் யோகமும்

பால்ய பொழுதுகள்

பட்டம் விடுவது பம்பரம் சுற்றுவது விடியும் பொழுதெல்லாம் விளையாட்டுக்களிலும் அதைப் பற்றிய நினைவுகளிலும் கழியும் பள்ளிக் கூட வாத்தியாருக்கு இடது கையால் வணக்கம் வைத்து வாங்கிக் கட்டிக் கொள்வது சிதறுதேங்காய்க்காக சண்டையிடுவது தோட்டத்து மாமரத்தில் கல்லெறிவது குளத்தில் பனங்காயை தூக்கி எறிந்து அதைத் தொட சகாக்களுடன் போட்டியிட்டு நீச்சலடிப்பது இளவட்ட பசங்களின் சேஷ்டைகளை ரசிப்பது அவர்களின் காதலுக்கு தூதுவனாக இருப்பது விரக்தி ஏற்படும் தருணங்களில் பால்யத்தின் கனவுகளை அசைபோட்டவாறு இருப்பது அம்புப்படுக்கையில் இருக்கும் பீஷ்மரைப் போல் வாழ்க்கை கொடிய கணைகளால் எனது நெஞ்சத்தைத் தைத்தது ஓர் நாள் விடாது பெய்த மழையில் நனைய யோசித்த பொழுதே எனது பால்யம் தொலைந்தது.

குவளைகளில் கொதிக்கும் பானம்

வரிசையாய் இருக்கும் மண் குவளைகளில் ஒழுங்கு தவறாது ஊற்றுகிறேன் கோபங்களை. நகர்த்த இயலாத சுடு வெயில் போல அறையெங்கும் பரவி இருக்கிறது மௌனம். கேள்விகளின் பிடிவாத நகர்த்தலில் வட்டங்களில் சுழல ஆரம்பிக்கிறது குவளைகளில் கொதிக்கும் பானம். காணாத காட்சி என கண்கள் சொல்ல கிடைக்கும் தாள்களில் வரையத் துவங்குகிறேன் ஒழுங்கற்றுப் பரவும் வண்ணங்களைத் தீட்டி. தூரிகையின் வேகம் உச்சத்தில் ஏற ஏற தாளில் துலங்கும் காட்சிகளும் துரித நடனம் ஆடும் குவளைகளும் ஒன்றின் மேல் ஒன்றாய் மிகச் சரியாய். வெந்து தணிகிறது வெப்பம். முடிந்த ஓவியத்தை மேசையில் வைக்கிறேன் நிதானமாய் - பிறிதொரு வேளை நின்று யோசிக்கவும், கடந்து செல்லவும். -

எது கவிதை........1

ஒரு ஞாயிற்றுக்கிழமை காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, என் உறவினர் ஒருவர் ஒரு சினிமாப் பாடலாசிரியர் பெயரைக் குறிப்பிட்டு அவர் கவிஞர்தானே என்றார். சினிமா பாடலாசிரியர் ஒவ்வொருவரும் சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களை கவிஞர்கள் என்று கூறிவிட முடியாது. கவிதை வேறு சினிமாப் பாடல் வேறு. சினிமா பாடல் எழுதுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். புகழ் அடையலாம். கவிதை அப்படி அல்ல. இன்னும் கேட்டால் கவிதை எழுதுபவர்கள் யாரும் தன்னை கவிஞர் என்று சொல்லிக்கொள்ள விருப்பப் படமாட்டார்கள். நிஜமாக கவிதை எழுதுபவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். பாரதியின் வசன கவிதையிலிருந்து ஒரு மாற்றம் இருந்தாலும், கவிதை பலவிதப் போக்கில் செல்ல ஆரம்பித்து விட்டது. ந.பிச்சமூர்த்தி கூட கொஞ்சம் மரபு கொஞ்சம் புதுக்கவிதை என்று தாவிக்கொண்டிருந்தார். க.நா.சுதான் கவிதையின் புதிய பாதையை இன்னும் திறந்து வைத்தார். இன்று கவிதை பலவிதப் போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. என் நண்பர் லாவண்யா அவருடைய மூன்றாவது கவிதைத் தொகுதியைக் கொண்டுவர யோசனை செய்து கொண்டிருக்கிறார். அவருக்

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.....2

க.நாசுவின் இலக்கிய முதிர்ச்சியும் விமர்சனப் பாங்கும் 2 நகுலன் இலக்கிய வட்டம் 22.05.1964 இதழில் ''விமர்சனத்தின் நோக்கம்'' என்ற தலையங்கக் கட்டுரையில் வருமாறு எழுதுகிறார். ''இலக்கிய விமர்சன ரீதியாகக் கவனிக்கும்போது கூட இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட விஷய கனத்தினால்தான் ஒரு இலக்கியம், ஒரு நூல் நிலைக்கிறது என்று டி.எஸ் எலியட் போன்ற கவிஞர் விமர்சகர்கள் உணர்ந்து சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.... இந்த விஷய கனத்தை உணர்ந்துகொள்ள இந்திய சிந்தனை இந்திய விமர்சனுக்கு உதவக் கூடும் என்பது என் நம்பிக்கை. மேலும் சொல்கிறார்: எனது அனுபவமும், அந்த அனுபவத்தில் ஆனந்தமும் எப்படி ஏற்படுகிறது என்று அறிந்து கொள்ளச் செய்யப்படுகிற முயற்சியை இலக்கியத்திலானால் விமர்சனம் என்றும், வாழ்க்கையிலானால் தத்துவ தரிசனம் என்றும் சொல்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ கடைபிடிக்கிற தத்துவம் மனிதனாய்ப் பிறந்துவிட்ட ஒவ்வொருவனுக்கும் அவசியமாகிறது. இங்கு குறிப்பிட்ட இவ்விரு அடிப்படைகளும் க.நா.சுவின் படைப்பை நாம் சரிவர புரிந்துகொள்ள நமக்கு உதவும் என்றுதான் நினைக்கிறேன். இன்னும் ஒரு மேற்கோள். அவர் இலக்கிய விசாரம் என்ற