Skip to main content

Posts

Showing posts from August, 2015

புத்தக விமர்சனம் 8

அழகியசிங்கர்   இமையம் அவர்களின் 'எங்கதெ' என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன்.  110 பக்கங்களில் எழுதப்பட்ட நாவல் இது.  சமீபத்தில் தமிழ் இந்து மடடுமல்லாமல் இன்னும் பல பத்திரிகைகளில் இந்த நாவலைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள்.  தமிழ் இந்துவில் பெரிய அளவில் இந்தப் புத்தகத்தைப் பற்றி இரண்டு பேர்கள் விமர்சனம் செய்திருந்தார்கள்.  அதேபோல் தீராநதியிலும், அமிருதாவிலும் இப் புத்தகம் பற்றி விமர்சனம் வெளியிட்டிருந்தார்கள்.  மேலும் இப் புத்தகத்தைப் பற்றி ஒரு கூட்டம் நடந்தது.   ஒருவிதத்தில் இப்படி இப் புத்தகத்தைப் பற்றி பேசுவது சரியானது என்று தோன்றுகிறது.  உண்மையில் நடுப்பக்கத்தில் ஒரு புத்தகம் பற்றி இப்படி விமர்சனம் வருவது நல்ல விஷயமாக எனக்குப் படுகிறது. ஒரு தமிழ் இந்து இல்லை, நூறு தமிழ் இந்துக்கள் உருவாக வேண்டும்.  நடுப்பக்கத்தில் கண்டுகொள்ளமால் விடப் படுகிற பல புத்தகங்களை எல்லோரும் எழுத வேண்டும்.  சினிமா படங்களுக்கு, சினிமா நடிகர், நடிகைக்குக் கிடைக்கிற முக்கியத்துவம் எழுத்தாளர்களுக்குக் கிடைக்க வேண்டும்.  இதெல்லாம் சொல்லலாம். ஆனால் நடக்காது. ஏனென்றால் புத்தகம் படிப்பவர்

கசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்

ஹரி : ஓம் : தத் : ஸத்                                                                                                               ஐராவதம் நெடுஞ்சாலை நடுவினிலே நான் நீண்ட நேரம் படுத்திருக்க நினைத்ததுண்டு பச்சை விளக்கு எரிகையிலே பாய்ந்து வரும் கார்கள் பஸ்கள்,  லாரிகள், டாக்ஸிகள் ஸ்கூட்டர்கள், சைகிள்கள் அத்தனையும் என் பொருட்டு நின்றுவிடும் எனக் கற்பனை செய்ததுண்டு. கடற்கரைக் கூட்டத்தில் கல்லெறிய துடித்ததுண்டு ஒளிச்சர விளக்குகள் ஒலித்துச் சிதற பலி ஆடு மந்தையென பார்த்திருப்போர் கூட்டம் ம்மே ம்மே என அலறிச் சிதற மேடையில் நிற்பவர் மணலுக்குத் தாவ களேபரச் சந்தடியில் காற்றாய் மறைய நினைத்ததுண்டு பாட்டுக் கச்சேரியில் பட்டுப் புடவைகள் வைரத்தோடுகள் நவரத்தினக் கழுத்தணிகள் நாற்புறமும் சிதற கீர்த்தனை கிறீச்சிட முத்தாய்பபு விழிதெறிக்க சங்கதிகள் அந்தரத்தில் சதிராட வெடிகுண்டு வீசிடவும் என் கைகள் துடித்ததுண்டு. நகரத்தின் தெருக்களில் நான் இன்னமும் நடக்கிறேன்..... நடக்கிறேன்.....நடக்கிறேன்..... ஐராவதத்தின் இந்தக் கவிதை வ

கசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்

அழைப்பு  நீலமணி நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள் என்று விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன வாயேன் இயற்கை நா ஜெயராமன் நோட்டீசு ஒட்டக்கூடாதென்று எழுதியிருந்த காம்பௌண்டு சுவரில், வேப்பமரக் கிளை நிழல் நோட்டீசாக் படிந்திருந்தது 1971ஆம் ஆண்டு வந்த ஒரு ரேடியோ விளம்பரத்தைக் கேட்டு நீலமணி எழுதிய கவிதை அழைப்பு கவிதை.  இன்று அதன் அர்த்தம் மாறிப் போய்விட்டது.   காலம் மாற மாற சில கவிதைகள் தன் தன்மையை இழந்து விடுகின்றன.  நீலமணி கவிதை அதற்கு ஒரு உதாரணம் என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் நா ஜெயராமனின் இயற்கை என்ற கவிதை இன்னும் வாசிப்பு அனுபவத்தை பலப்படுத்துகிறது.  2015லும் இக் கவிதை பொருந்தி போய்விடுகிறது.  கவிதை என்பது காலத்தைக் கடந்து நிற்க வேண்டும். ஜøன் 1971 மாத கசடதபற அட்டைப் படத்தை வரைந்தவர் கவிஞர் வைதீஸ்வரன்.

புத்தக விமர்சனம் 7

  அழகியசிங்கர் நான் சில தினங்களுக்கு முன் தாம்பரம் சென்றேன்.  வெயில் சற்று குறைவாக இருக்கும்போது போனேன்.  மின்சார வண்டியில தாம்பரம் சென்றேன்.  பஸ்ஸில் சென்றால் அதிக நேரம் எடுக்கும். மின்சார வண்டியில் போவதுதான் சரி.  எப்போதும் நான் எங்காவது போனால் புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு போவேன்.  படிக்க முடிந்தால் படிப்பேன்.  ஒரு ஜோல்னாப் பையில் நான் இப்படி புத்தகம் போட்டு எடுத்துக்கொண்டு போவது என் நண்பர் ஒருவருக்குப் பிடிக்காது. நான் இந்த முறை எடுத்துக்கொண்டு போன புததகம் 'இந்தியா 1948' என்ற புத்தகம்.  அசோகமித்திரன் எழுதிய நாவல் இது. கிட்டத்தட்ட 144 பக்கங்கள் கொண்ட நாவல்.  நான் மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறியவுடன், உட்கார இடம் பார்த்துக்கொண்டு பின் நிதானமாக இந்தப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டேன்.  என் கவனம் எல்லாம் புத்தகத்தில் இருந்தாலும், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நிற்கும்போது, வண்டியில் ஏறுபவர்களைப் பார்ப்பேன்.  எந்த ஸ்டேஷனலில் வண்டி நிற்கிறது என்பதையும் கவனிப்பேன். தாம்பரம் வந்தடைந்தபோது புத்தகத்தில் 35 பக்கங்கள் படித்து விட்டேன்.  எனக

கசடதபற மே 1971 - 8வது இதழ்

நானுமென்னெழுத்தும்                                                                                         நகுலன்      நின் கைவசம் என் கைப்பிரதி "இதனையெழுது"என்றாய் எழுதினேன். "இதனையழி" என்றாய் "அழித்தேன்" "இதனையிவ் வண்ணமெழுது" என்றாய் சொன்னவண்ணமே செய்தேன். இதுவென்னூல் இதுவென் பெயர் இது வென்னெழுத்து விமர்சனமும் விரைவில் வந்தது "ஆ என்ன வெழுத்து," என்றாரொருவர் "ஆ இதுவன்றோ வெழுத்து" என்றாரொருவர். என்எனழுத்தில் நானில்லை என்றாலுமென் பெயருண்டு எழுதியெழுதி அழித்தேன் அழித்து அழித்து ஆளானேன். விமர்சகரும் சொல்லி விட்டார் இல்லா ததையெல்லாம் உண்டென்று சொல்லி விட்டார். மாமுனி பரமஹம்ஸன் அவன் மாபெரும் சீடன் சொன்னான் "மாயை யென்பது மன்பதையனுபவம்" மாயையென்னெழுத்து மாமாயை என் வாழ்வு என்றாலுமென்ன இது வென்னூல் இது வென்பெயர் இது வென்னெழுத்து. கவிதையை பொதுவாக எளிதாக எழுதுவதாக தோன்றினாலும, நகுலன்   எழுத்து எளிதாக புரிந்து விடாது.  இக் கவிதையில் நக

கசடதபற மே 1971 - 8வது இதழ்

விதி      கலாப்ரியா அந்திக் கருக்கலில் இந்தத் திசை தவறிய பெண் பறவை, தன் குஞ்சுக் காய், தன் கூட்டுக்காய், அலைமோதிக் கரைகிறது. எனக்கதன் கூடும் தெரியும், குஞ்சும் தெரியும், இருந்தும் எனக்கதன் பாஷை புரியவில்லை.

புத்தக விமர்சனம் 6

  அழகியசிங்கர் எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது என்பது தேவதச்சனின் கவிதைத் தொகுதியின் பெயர்.  எப்படி இந்தப் பெயரை தலைப்பாக தேவதச்சன் வைத்தார் என்று யோசித்தேன்.  ஏன்எனில் சினிமா தயாரிப்பாளர்கள் பார்த்தால் இந்தப் பெயரை ஒரு படத்தின் தலைப்பாக வைத்துக்கொள்ள விரும்பலாம்.   இன்று பரவலாக தேவதச்சன் பெயர் பலரால் உச்சரிக்கப் படுகின்றது. எழுபதுகளின் ஆரம்பத்தில் கசடதபற இதழ்களில் அவர் எழுத ஆரம்பித்தபோது, அவருடன் இன்னும் பலரும் கவிதைகள் எழுத ஆரம்பித்தார்கள்.  அவர்களில் பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்பதுகூட தெரியவில்லை.  பெரும்பாலோர் கவிதை எழுதுவதை விட்டிருப்பார்கள்.   அதிகமாக விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் தேவதச்சனும் கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறார்.  1982ல் முதன் முதலாக அவருடைய கவிதைத் தொகுதி அவரவர் கைமணல் ஆனந்த் கவிதைகளுடன் சேர்ந்து வெளிவந்தது.  1982க்குப் பிறகு 2000ல்தான் அவருடைய மற்றொரு கவிதைத் தொகுதி வெளிவருகிறது.  தன்னுடைய கவிதைகள் புத்தகமாக வர வேண்டுமென்று ரொம்ப ஆர்வமாக இருக்க மாட்டார்.   அவரைப் பார்க்க வருகிற நண்பர்களிடம் மட்டும் கவிதைகள் பற்றி, இன்ன

இன்றைக்கு ஸ்டெல்லா புரூஸ் பிறந்தநாள்....

அழகியசிங்கர் பொதுவாக நான் யார் பிறந்தநாளையும் ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டேன்.  ஆனால் சமீபத்தில்தான் இந்த பிறந்தநாள் ஞாபகம் என்னிடம் ஒட்டிக் கொண்டுள்ளது.  குறிப்பாக ராம் மோஹன் பிறந்த நாளை நான் மறப்பதில்லை.  ராம் மோஹன் என்பவர் வேறு யாருமில்லை ஸ்டெல்லா புரூஸ்.  அவருடைய பிறந்த நாள் இன்று.  அவர் உயிரோடு இருந்திருந்தால், இன்று 75 வயதாவது அவருக்கு ஆகியிருக்கும்.  உண்மையில் எனக்கு அவருடைய பிறந்த தேதி மாதம் மட்டும் ஞாபகம் இருக்கிறது.  அவர் எந்த வருடம் பிறந்தார் என்பது ஞாபகத்தில் இல்லை.  அவர் சொன்னதும் இல்லை. தானாகவே உயிரை மாய்த்துக் கொண்ட எழுத்தாளர்களில் இவர் ஒருவர், ஆத்மாநாம் இன்னொருவர்.  ஸ்டெல்லா புரூஸ் அதுமாதிரி செய்தது சரியான செயலாக நான் கருதவில்லை.   அவர் ஏன் ராம் மோஹன் என்று எழுதாமல் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் எழுதினார் என்பதற்கு ஒரு கதை உண்டு.  அவர் நேசித்த பெண்ணிற்கு வேறு சிலரால்  அந்நியாயம் நடந்ததால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்.  அவள் நினைவாக அந்தப் பெயர் அவர் வைத்துக் கொண்டார். ஸ்டெல்லா புரூஸ் காளி-தாஸ் என்ற பெயரில் எளிமையான கவிதைகள் பல எழுதி உ

புத்தக விமர்சனம் 5

 அழகியசிங்கர்                                                                               கொஞ்ச நாட்களாய் நான் படிக்கும் புத்தகத்தைப் பற்றி எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதலாம் என்று நினைக்கிறேன்.  நான் தினமும் புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் வேகமாக என்னால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடிவதில்லை.  மேலும் ஒரே புத்தகத்தை மட்டும் நான் எடுத்துப் படிப்பதில்லை.  ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு சில பக்கங்களை நான் படித்துக் கொண்டு வருகிறேன். சமீபத்தில் நான் படித்து முடித்த புத்தகம் மலர்வதி எழுதிய தூப்புக்காரி என்ற நாவல்.   இந்த நாவலும் யுவபுரஸ்கார் விருது பெற்ற நாவல்.   தலித் எழுத்தை ஒரு தலித்து எழுதுவதுதான் சிறப்பாக அமையும்.அந்த வகையில் தூப்புக்காரி என்ற நாவல் ஒரு தலித்தால் எழுதப்பட்ட நாவல். இப்போது ஒரு கேள்வி எழுகிறது.  ஒரு தலித் நாவலை தலித் மட்டும்தான் எழுத முடியுமா?.  ஜெயகாந்தன் எப்படி ஒரு பிராமண நாவலை பிரமணர்களை விட நன்றாக எழுத முடிந்ததோ, அதேபோல் ஒரு தலித் நாவலை பிரமணரோ அல்லது மேல் வகுப்பினரோ எழுதமுடியுமா?  எது எழுதினாலும் அது கலைத்தன்மை கொண்டத

என் தாய்மொழி தமிழ்.

ஜெ.பாஸ்கரன் ‘ அம்மா ‘ என்றுதான் என் அன்னை எனக்கு அறிமுகமானாள் ! நினைவு தெரிந்த நாள் முதல், நான் பேசியும், பழகியும் வருவது தமிழில்தான். பள்ளியில் கற்றதும் தமிழ்வழிக் கல்விதான் ! (தமிழ் மீடியம்) முறையாகப் பள்ளியில் சமஸ்கிரதமும், ஹிந்தியும் நான் கற்றுக் கொள்ளத் தடை செய்யப்பட்டவன். செய்யும் தொழில் கருதியும், பிற மாநில,நாடுகளுடன் என்னைத் தொடர்பு கொள்ளவும் நான் கற்ற பிற மொழி, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆங்கிலம். தமிழ்ப் பாடல்கள், தமிழ்க் கதைகள், தமிழ் வழக்குகள் எனக்கு, சிறு வயதிலிருந்தே அறிமுகம் செய்யப் பட்டவை – செய்தது, என் முன்னோர்கள் – அவர்கள் தாய்மொழியும் தமிழ்தான் ! ஆழ்வார்கள் பிரபந்தங்களையும், நாயன்மார்கள் தேவார, திருவாசகங்களையும் பாடியது என் தாய்மொழி தமிழிலேயேதான் – அதனால் ஓரளவுக்கு எளிதில் அவை எனக்குப் புரிந்தன ! ஆத்திச்சூடியும், நாலடியாரும், கம்பராமாயணமும், திருக்குறளும், சிலப்பதிகாரமும், சீவகசிந்தாமணியும், இன்ன பிறவும் அவ்வாறே எனக்குப் பயிற்றுவிக்கப் பட்டன ! இலக்கியத்துக்கும், வரலாற்றுக்கும் அதிக வேற்றுமை தெரியாமல் அவை என்னுள் தாய்மொழ