Skip to main content

Posts

Showing posts from March, 2016

போட்டோ

நா கிருஷ்ணமூர்த்தி இருபது வருடங்களுக்கு முன்பு முதல் வகுப்பு படிக்கும்போது எடுத்த புகை படிந்துவிட்ட =குரூப்+ போட்டோவில் அறுபது முகங்களுக்கு நடுவில் ஒட்டி நிற்கும் மகனை இமைகள் விரிய இதழ்கள் விரிய சட்டென அடையாளம் கண்டுவிடுகிறாள் அம்மா....

நகுலன் கவிதைகளை வாசிக்கலாமா?

அழகியசிங்கர் எந்தச் சிறு பத்திரிகை ஆகட்டும் நகுலன் கவிதை இல்லாமல் இருக்காது. நகுலன் ஏற்கனவே கவிதைகளை எழுதி வைத்திருப்பார். சிறுபததிரிகைக்காரர்கள் எல்லோரும் அவர்களுடைய சிறுபத்திரிகைகளை நகுலனுக்கு அனுப்பாமல் இருக்கமாட்டார்.  பின் அவர் எழுதிய கவிதைகளை பத்திரிகைக்கு அனுப்புவார்.  கூடவே தபால் தலைகளையும் சேர்த்து அனுப்புவார்.  ஒரு வார்த்தை எழுதுவார்.  கவிதைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தயவுவெய்து திருப்பி அனுப்பி விடுங்கள் என்று.  யாரும் அவர் கவிதைகளை திருப்பி அனுப்ப மாட்டார்கள்.  விருட்சம் இதழிற்கு ஒரு முறை அவர் எழுதிய கவிதையைப் பிரசுரம் செய்தேன்.  உடனே ஒரு படிம கவிதை எழுதுபவர் என்னிடம் சண்டைக்கே வந்து விட்டார்.  பின் அவர் எழுதிய அதிரடி கவிதையில் என்னையும் நகுலனையும் திட்டி ஒரு கவிதை எழுதி விட்டார்.   மீட்சி 27 ல் வந்த ஐந்து கவிதைகள் என்ற நகுலன் கவிதைகளை நாங்கள் நடேசன் பூங்காவில் வாசித்தோம்.  அவற்றைக் கேட்கும்போது ஒரே சிரிப்பு. இதோ இங்கேயும் அவற்றை உங்களுக்கு படிக்க அளிக்கிறேன்.  நீங்களும் சிரிப்பீர்கள். ஐந்து கவிதைகள்  'நகுலன்' வால்ட் விட்மன் :

நானும் நடேசன் பூங்காவும்

அழகியசிங்கர் நான் கல்லூரி படிக்கும் காலத்தில் நடேசன் பூங்காவில் தினமும் வந்து ஓடுவேன்.  எத்தனை முறை ஓடுவேன் என்பது ஞாபகத்தில் இல்லை. தி நகரில் உள்ள இந்த நடேசன் பூங்காவை என்னால் மறக்கவே முடியாது.   இந்த நடேசன் பூங்காவில் நான் பல நண்பர்களுடன் வந்து  சும்மா பேசிக்கொண்டிருப்பேன்.  அப்போதே பலர் கூட்டம் நடத்திக் கொண்டிருப்பார்கள். ஒரு கட்டத்தில் நான் பூங்கா போவதையே நிறுத்தி விட்டேன்.  நடேசன் பூங்கா ஒரு அற்புதமான பூங்கா.  எனக்கு பனகல் பூங்காவை விட நடேசன் பூங்காதான் ரொம்பப் பிடிக்கும். அதன் பின் பல ஆண்டுகளுக்குப் பின் என் வலது கையை தூக்க முடியவில்லை.  தோள் பட்டையில் வலி. வலி என்றால் அப்படியொரு வலி.  ஆர்த்தோ மருத்துவரைப் போய்ப் பார்த்தேன்.  அதனால் எந்தப் பிரயோஜனமும் எனக்கு ஏற்படவில்லை.  அந்த சமயத்தில் Laughter Club   என்பதைப் பற்றி கேள்விப்பட்டேன்.  அதன் தலைமை இடம் திருவல்லிக்கேணி.  அங்கிருந்த சிலர் நடேசன் பூங்காவிலும் அதைத் தொடங்கி வைத்தார்கள். ஆரம்பத்தில் நானும் கலந்துகொண்டேன்.  தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து விடுவேன்.  Laughter Club  ல் பலவிதமான உடலுக்கான பயிற்

நடேசன் பூங்காவில் நடந்த இலக்கியக் கூட்டம்

  அழகியசிங்கர் சரியாக 4 மணிக்கே பூங்காவிற்கு சென்று விட்டேன்.  அங்கிருந்த காவல் காரரைக் கேட்டேன்.  üபூங்கா எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை திறந்திருக்கும்,ý என்று.  அவர் சொன்னார்.  காலை 4 மணியிலிருந்து இரவு 9 மணிவரை திறந்திருக்கும் என்று.  கேட்க எனக்கு ஆச்சரியம். கேட் வாசலில் நின்றுகொண்டு üஒரு கதை ஒரு கவிதை வாசித்தல்ý கூட்டத்திற்கு யார் வருகிறார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.  எனக்கு ஒரு சந்தேகம். வருபவர்களுக்கு எப்படி நான்தான் கூட்டத்தை நடத்துகிறேன் என்பது தெரியும் என்ற சந்தேகம் தான் அது.  அதனால் மேடை மாதிரி உள்ள ஒரு இடத்தல் போய் அமர்ந்து கொண்டேன்.  மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக இதுமாதிரியான கூட்டத்திற்கு வருபவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.  எல்லோரையும் உட்கார வைத்துவிட்டு நான் நின்றுகொண்டு முதல் கதையைப் படிக்க ஆரம்பித்தேன்.  வ வே சு ஐயரின் குளந்தங்கரை அரசமரம் என்ற கதை.  இக் கதைதான் தமிழில் எழுதப்பட்ட முதல் கதை என்று கூறினார்கள்.  நான் சத்தகமாக வாசித்தேன்.  அதை அப்படியே சோனி ரெக்கார்டரில் பதிவு செய்தேன்.  கிட்டத்தட்ட நான் அந்தக் கதையைப் படித்து முடி

ஒரு கதை ஒரு கவிதை வாசித்தல் கூட்டம்........

அழகியசிங்கர் தமிழில் படிப்பது என்பது மிகவும் குறைந்து போய்க் கொண்டிருக்கிறது.  பத்திரிகைகளில் முன்புபோல் கதைகள் பிரசுரமாவதில்லை என்று சொல்பவர்கள், பிரசுரமாகிக் கொண்டிருக்கும் கதைகளை எத்தனைப் பேர்கள் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.  அதே போல் கதைகள் எழுதப்பட்டு பிரசுரம் ஆவதின் வழி தெரியாமல் இருப்பவர்கள் அதிகம் பேர்கள் உள்ளனர். கதை படிப்பதில், கவிதை வாசிப்பதில் ஆர்வம் உள்ள எழுத்தாளர்கள் நண்பர்கள் பலர் உண்டு.  அவர்கள் ஒன்று சேர்ந்து எதாவது செய்ய முடியுமா?  அதேபோல் கதையை கவிதையை நேசிக்கும் வாசகர்களும் உண்டு.  எல்லோரும் ஒன்று சேர்ந்தால் என்ன? கதையைப் படிப்பது கவிதையைச் சொல்வது என்ற பழக்கத்தை நாம் நமக்குள் உருவாக்கிக் கொள்ள என்ன வழி? அப்படி யோசித்துப் பார்த்தேன்.  பெரிய அளவில் கூட்டம் இல்லாமல், நம் இருக்கும் இடத்தில் பக்கத்தில் உள்ள பொது இடத்தில் வாரம் ஒரு முறை, அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, அல்லது மாதம் ஒரு முறை கூடி ஆளுக்கு ஒரு கதை அல்லது ஒரு கவிதை வாசித்தால் என்ன?   நாம் எழுதுகிற கதைத்தான் கவிதையைத்தான் வாசிக்க வேண்டுமென்பதில்லை.  நமக்குப் பிடித்த கதை அல

புத்தக விமர்சனம் 19

'உலோக ருசி' -  பெருந்தேவி அழகியசிங்கர் சமீபத்தில் நான் படித்தப் புத்தகம் 'உலோக ருசி' என்ற பெருந்தேவியின் கவிதைப் புத்தகம்.  பொதுவாக நான் கவிதைத் தொகுதியைப் படிக்கும்போது ஒரே அமர்வில் எல்லாவற்றையும் படித்து விடுவேன்.  ஆனால் சில புத்தகங்களை மட்டும் யோசித்து யோசித்து திரும்பவும் எடுத்து வைத்துக்கொண்டு படிப்பேன்.   உண்மையைச் சொல்லப் போனால் ஒரு நாவல் படிப்பது, ஒரு சிறுகதையைப் படிப்பது, ஒரு கட்டுரையைப் படிப்பது போல் சுலபமானதல்ல கவிதையைப் படிப்பது.  நாவலாகட்டும், சிறுகதை ஆகட்டும், கட்டுரை ஆகட்டும் நம்முடன் உடனடியாக அதன் அடுத்த அடுத்த நிகழ்ச்சிகள் உரையாடிக் கொண்டிருக்கும்.  ஆனால் 1000 பக்கங்கள் உள்ள மெகா நாவலைப் படிக்க ஞாபக சக்தி அவசியம் தேவை.   கவிதையைப் படிப்பதில் வேறு பிரச்சினை வருகிறது.  அதாவது ஒவ்வொரு கவிதையைப் படிக்கும்போது ஒரே மாதிரியான தோற்றத்தைத் தருகிறது போல எண்ணம் ஏற்படும்.  திரும்ப திரும்ப ஒரே விஷயம் போர் என்று கூட தோன்றும். மேலும் நாம் விரும்பும் விஷயத்தை கவிதை எப்போதும் சொல்வதில்லை.  நாவலாகட்டும், சிறுகதை ஆகட்டும், கட்டுரை ஆகட்டும் ஒர

மறந்து போன பக்கங்கள்....

அழகியசிங்கர் கோடை வயல் என்ற தொகுப்பிலுள்ள தி சோ வேணுகோபாலனின் 7வது கவிதை கவலை.  இயல்பாய் இருக்க முடியாத வாழ்க்கையைக் குறித்த கவலைதான் இக் கவிதை.  ஒரு முறைக்கு இருமுறையாக படித்துப் பாருங்கள் இந்தக் கவிதையை.      கவலை விண்ணை அண்ணாந்து பார்க்கின்றோமி: ஆனால்? விதிதேய்து விட்டெறிந்த கிழிந்த பழஞ்செருப்பில், காலுதறி விட்ட புழுதித் தடத்தில் நெஞ்சைப் புரட்டுகிறோம் அல்லது அறிவால், இதயத்தால் உருவமைக்க முடியாத ஊர்ப்புறத்தை நாடி அடியளந்து அடியெல்லாம் அஞ்சும் அடிச்சுவடாய் அடைத்த கதவுக்குள் அகப்பட்ட பழங்காற்றாய் புழுங்கும் புதிராய், கற்பித்த கற்பனையும் கண்ணாடிச் சில்லுகளாய்க் கண்டு குமைகின்றோம் இன்றிங்கிருக்கும் இயல்பை, சத்தியத்தை இன்பத்தை, துன்பத்தை, வினாடித்துடிப்புகளை தொட்டும் பார்த்தறியோம் ஆனால்? விண்ணை அண்ணாந்து பார்க்கின்றோம் பார்த்து  விடுவானேன் பெருமூச்சு?

கழுதைகளின் உலகம்.......

சா இளையராஜா    பூமி முழுவதும் பல பூக்கள் பூத்துக் குலுங்கினாலும் அவற்றில் ஒரு பூக்கூட அழகான கழுதைகளாகிய எங்கள் நிறத்தில் இல்லை............. பின் குறிப்பு : கழுதைகளின் உலகம் என்ற தலைப்பில்  சா இளையராஜா என்பவரின் கவிதையை விருட்சம் 99வது இதழில் வெளியிட்டுள்ளேன்.  ஞானக்கூத்தன் இவருடைய கவிதைகளைக் கொடுத்து உதவி உள்ளார்.  கழுதைகளை அடிப்படையாகக் கொண்டு பல கவிதைகள் எழுதி உள்ளார் இளையராஜா.  நான் யோசிப்பதுண்டு ஒரு புத்தகத்தில் கழுதையைப் பற்றியே எல்லாக் கவிதைகளும் படிப்பது எப்படி இருக்கும் என்று.  ஒன்றிரண்டு கவிதைகள் என்றால் சரி?  ஆனால் எல்லாமே அப்படியே இருந்தால்......

அசோகமித்திரன் கதை....

அழகியசிங்கர் 99வது இதழில் வெளிவந்த அசோகமித்திரன் கதை இது.ஏற்கனவே ரேடியோவில் இக் கதை ஒலிபரப்பாகி உள்ளது.  தினமும் ஒரு கதை ஒரு கவிதை வாசிக்கலாம் என்று நினைக்கிறேன். அப்படி வாசித்தால் 30 நாட்களில் 30 கதைகள் வாசிக்கலாம்.  அதேபோல் 30 கவிதைகள் வாசிக்கலாம.  ஓராண்டில் 365 கதைகளையும், கவிதைகளையும் வாசிக்கலாம்.  அசோகமித்திரன் கதையைப் படித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும். பிரிவுபசாரம்                                                                                                        அசோகமித்திரன் “துரை கூப்பிட்றாரு,” என்று பங்கா ஆட்டும் ஹமால் காந்திமதி சொன்னான். சங்கரலிங்கம் அவன் மேஜையிலிருந்து எழுந்து ஜில்லா கலெக்டர் மால்கம் ஸ்காட் அறைக்குச் சென்றான். “சங்கர்லிங்கம், எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. தி டைம் ஹாஸ் கம் டு பார்ட்,” என்றான். “என்ன மாஸ்டர்?” “என்னை மாஸ்டர்னு கூப்பிடாதேன்னு எவ்வளவு தரம் சொல்லிவிட்டேன்? இனிமேல் நான் சொல்லத் தேவை இருக்காது.” “ஏன்?” “என்னை ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜுக்கு மாற்றி விட்டார்கள்.” “ரொம்ப சந்தோஷம், மா...சார்.” “உனக

ஒரு உரையாடல் தொடருகிறது......

.நவீன விருட்சம் 99வது இதழில் வெளிவந்தது..... அழகியசிங்கர் நவீன விருட்சம் ஒவ்வொரு இதழிலும் உரையாடல் பாணியில் புத்தகங்கள் பற்றி, இலக்கியக் கூட்டங்கள் பற்றி, எழுத்தாளர்களைப் பற்றி செய்திகளை அலசுவேன்.  நவீன விருட்சத்தில் இரண்டு பக்கங்கள் வரும்வரை இதை எழுதி முடிப்பேன்.   இதுமாதிரி எழுத என்னைத் தூண்டியவர் ஒரு விதத்தில் க நா சுதான்.  அவருடைய புத்தகமான 'படித்து விட்டீர்களா?' என்ற புத்தகத்தைப் படித்துதான் உரையாடல் பாணியில் எழுத வேண்டுமென்று தோன்றியது. என்னுடன் உரையாடலைத் தொடங்க ஜெகனும், மோஹனியும் சம்மதம் தெரிவித்தார்கள்.  அவர்களுக்கு என் நன்றி.         அழகியசிங்கர் : வணக்கம். ஜெகன், மோஹினி ஒரே குரலில் வணக்கம். அழகியசிங்கர் :  என்ன உங்கள் இருவரையும் ஆறாம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை பார்க்க முடியவில்லை. ஜெகன் : உண்மையில் உங்களைத்தான் பார்க்க முடியவில்லை. மோஹினி : நான் போன் செய்தால், நீங்கள் போனையே எடுக்கவில்லை.   மேலும் நான் சினிமாவில் இருக்கிறேன் என்று தகவல் வேறு    கொடுத்துக்கொண்டே இருந்தீர்கள். அழகியசிங்கர் : ஆமாம் 13ம் சென்னை சர்வ

சந்தியாவல்லியைத் தேடி போகும் போது

சே சேவற்கொடியோன் நீலக்குயில் இதழில் வெளிவந்த கவிதை சந்தியாவல்லியைத் தேடி போகும் போது என்ற ஒன்று.  சே சேவற்கொடியோன் என்பவர் எழுதி உள்ளார்.  யார் இந்த சேவற்கொடியோன் என்பது தெரியவில்லை.  ஆனந்த விகடனில் இருந்த தாமரை மணவாளன் என்ற எழுத்தாளரா என்பது சந்தேகமாக உள்ளது.   ஆனால் இந்தக் கவிதை படிக்க சுவாரசியமாக உள்ளது.  அதனால் இதை இங்கு தருகிறேன்.  நண்பர்களே, படித்து விட்டு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புங்கள்.  இந்தக் கவிதைக்கு பத்துக்கு எத்தனை மதிப்பெண் கொடுக்கலாம்?  கவிதை வெளியான ஆண்டு மார்ச்சு 1975. சந்தியாவல்லியைத் தேடி போகும் போது பஞ்சாயத்து ரேடியோ பாடி முடிக்கையில் சின்னக் கண்ணய்யா தோப்பில் சாமியாடடம் தொடங்கும் குருட்டு ஆறுமுகம் மணிக்குறவன் பாட்டை தெப்படமண்டபத்திலிருந்து திசையெல்லாம் பரப்புவான் கிறுக்கு அழகம்மாள் உடலைத் தொட்டிழுத்த பெரிய தனக்காரருக்கு பிலாக்கணம் பாடுவாள் ஆண்டி வயல்கிடைகாக்கும் ஐயாவுக்கோனார் மாயவதாரன் கதையை மனமுருகிப்பாடுவார். தேங்காய் திருடிப்பங்குவைக்கும் நடமாடும் பேயரவம் சுடுகாட்டில் கேட்கும் சூரியன் பீடி கொள்ள

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 21

       நவீன எழுத்தாளன் இறந்து விட்டானா? பேசுவோர் :    கௌதம சித்தார்த்தன் இடம் :    அலமேலு கல்யாண மண்டபம   அகஸ்தியர் கோயில் பின்புறம் 19 ராதாகிருஷ்ணன் தெரு தி நகர், சென்னை 600 017 தேதி 19.03.2016  (சனிக்கிழமை) நேரம் மாலை 5.30 மணிக்கு பேசுவோர் குறிப்பு : 1992லிருந்து  'உன்னதம்' என்ற சிற்றேடை பல ஆண்டுகளாக நடத்தியவர்.  இதுவரை 5 சிறுகதைத் தொகுதிகளும்,    7 கட்டுரைத் தொகுதிகளும் கொண்டு வந்துள்ளார். 8 விருதுகள்  இலக்கியத்திற்காகப் பெற்றவர்.  சமீபத்தில் மலேசியாவிற்குப் போய்விட்டு வந்துள்ளார்.   கவுந்தன்பாடி என்ற ஊரைச் சார்ந்தவர். அனைவரும் வருக, அன்புடன் அழகியசிங்கர் - ஆடிட்டர் கோவிந்தராஜன்

அந்தி நேரத்தில் (நகுலனுக்கு)

ஷண்முக சுப்பையா காற்றைப் பிடித்து கல்லாக்க வீட்டு முற்றத்தில் வீற்றிருந்தேன் பால் புகைப்படலத்தின் வெளிப்படை மறைப்பில் புஷ்ப விமானங்கள் பூப்பந்தெறிந்தன தாமரை ஒன்று ஆம்பலாய் குவிந்து வழிமறந்து அறை புகுந்த வெளவாலாய் சிறகடித்துச் சிறை உடைக்க நாற்புறச் சுவர்க்கட்டில் முட்டி மோதி முடங்கிக் கிடக்கவே தாரைகள் இரண்டு பார்வை இருண்டு பாரை நோக்கிப் பனிமுத்துதிர்த்தன கிளி மரக் கொம்பில் சுற்றிப் பற்றிய முற்றத்து முல்லையின் நாற்றம் மூளையத் துழைத்தது. புழக்கடைப் பக்கத்து சீமைப் பப்பாளி ஊமைக்கொப்பாகி நீண்டு உருண்டு திரண்ட தன் காய்களை தலைவிரிகோல்த்திரைக்குள் மறைத்து அலைவிரித்தலறும் குகைக்குள் எழுந்து அம்மண ஆட்டம் ஆடிற்று பக்கவாட்டுப் புற்றிலிருந்து எரிமலைக் குழம்பாய் கரிநிறச் சாரை வழிந்து ஒழுகி பள்ளத்தாக்கில் சென்று மறைந்தது. குட்டிச் சுவரைத் தொட்டு மேலே மீகான் மேனோனின் நங்கூரம் பாய்ச்சிய சிங்கார விடு நந்தியாய் மறைத்தது சங்கரன் கோயிலை விண்வெளியில் ஒரு கொள்ளி மீன் எள்ளி நகையாடி எரிந்து விழ எழுந்தகம் புகுந்தேன். எதிரும் புதிருமாய் சபரிமலையில் தர்மசாஸ்தாஅ

99வது இதழில் வெளிவந்த ஞானக்கூத்தன் கவிதை

அழகியசிங்கர் நவீன விருட்சம் இதழ் வந்தவுடன் அதை எப்படி தீர்த்துக் கட்டுவது என்று உடனே பரபரப்பாக செயல்பட்டேன்.  முதலில் நான் நடை பயிற்சி செய்யும் இடத்திற்கு சில இதழ் பிரதிகளை எடுத்துக் கொண்டு போனேன். அங்கு எனக்கு அறிமுகமானவர்களைப் பார்த்து ஒவ்வொன்றாய் கொடுத்தேன்.  அதில் ஒருவர் சீனாவிலிருந்து பொருள்களை வாங்கி விற்பவர். நவீன விருட்சத்தை நீட்டியவுடன்,  "சார்...எனக்கு வேண்டாம்...நான் தமிழ் பத்திரிகை புத்தகம் படிப்பதில்லை," என்றார்.   எனக்கு அதிர்ச்சி.  முதன் முதலாக ஒருவரிடம் கொடுக்கச் சென்றபோது, அவர் இப்படி சொலகிறாரே என்று தோன்றியது. நான் கேட்டேன்.  "தமிழ்ல பேப்பர் புத்தகம் படிப்பதில்லையா?".  "இப்போ இல்லை...முன்பு படித்ததுதான், எனக்கு நேரமில்லை," "என்ன நேரம்...நீங்க மனசு வைச்சா நேரம் இருக்கும் சார்," என்றேன்.  "என்னால முடியாது, சார்."என்றார். "இதன் விலை ரூ 15 அதற்கா யோஜனை செய்யிறீங்க...அதைத் தர வேண்டாம்...ஆனா பத்திரிகை வாங்கிப் படிங்க...எனக்கு அது முக்கியம்.." "இல்ல சார்...அதுக்காக