Skip to main content

Posts

Showing posts from August, 2016

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 11

அழகியசிங்கர்  கிணற்றிரவு     ஜி எஸ் தயாளன் நடுகச்சாமத்தில் அம்மாவை இறுக அணைத்தபடி சஹானா அயர்ந்து உறங்குகிறாள் சன்னலைத் திறந்ததும் அறையின் இறுக்கம் தளர்கிறது இனி அவள் தனித்தே தூங்குவாள் போலிருக்கிறது அறைக்கு வெளியே மரக்கிளைகளில் எந்த அசைவுமில்லை வானம் இயல்பாய் இருந்தது தூரத்துச் சுவரில் வாகன ஒளி தோன்றுவதும் மறைவதுமாக இருக்கிறது எங்கும் நிலவின் மௌனம் சலனமற்ற ஒரு கிணறு வேறு வழியின்றி விண்ணையே பார்த்துக்கொண்டிருக்கிறது நன்றி : வேளிமலைப் பாணன் - கவிதைகள் - ஜி எஸ் தயாளன் - விலை ரூ.90 - பக் : 95 - முதல் பதிப்பு : டிசம்பர் 2014 காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் - போன் : 04652 - 2785 25

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 9

அழகியசிங்கர்          சுடர் வெம்மை வேல்கண்ணன் அப்பொழுது நான் மலையுடன் பேசினேன் இறுதியாக நீ மலையை கடந்ததால். அப்பொழுது நான் கடலுடன் பேசினேன் இறுதியாக நீ கடலில் கலந்ததால் அப்பொழுது நான் மரத்துடன் பேசினேன் இறுதியாக நீ பழங்களில் பசியாறியதால் எப்பொழுதோ நீ பகிர்ந்த      வெம்மையினால் தனித்திருக்கிறேன் இறுதியாக நான் ஒரே ஒரு சுடருடன்.. நன்றி :  இசைக்காத இசைக் குறிப்பு - கவிதைகள் - வேல்கண்ணன் வம்சி புக்ஸ் - 19 டி எம் சாரோன், திருவண்ணாமலை 606 601 - பக்கம் : 64 - விலை ரூ.60 - செல் எண் : 9445870995

அங்கும் இங்கும் 5

அழகியசிங்கர் போதையில் கார் ஓட்டி போலீஸ் வண்டி மீது மோதிய நடிகர் என்ற தலைப்பில் தினமலர் முதல் பக்கத்தில் ஒரு செய்தி.  இதுதான் தினமலர்.  படிப்பவரை வசீகரப்படுத்தும் நடை.  இதுமாதிரி ஒன்றை தமிழ் இந்துவோ தினமணியோ செய்தியைப் போட மாட்டார்கள்.  ஆனால் தமிழ் இந்துவின் துணிச்சல் அதன் நடுப்பக்கத்தில்.  அந்தத் துணிச்சல் வேற தமிழ் இதழ்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை.  ஆனால் செய்திகளை வெளியிடுவதில் தினமலரையோ தினத்தந்தியையோ பீட் செய்ய முடியாது.   தினமணியோ எப்போதும் போல் ஒரு நிதானமான ஓட்டத்தில் வந்து கொண்டிருக்கிறது.  அறிவுபூர்வமான கட்டுரைகள், தலையங்கம் என்று அதன் நடுப்பக்கம் அலங்கரிக்கப்படுகிறது.  தமிழ் இந்துவில் இரண்டாவது பக்கத்தில் ஜோஸ்யம், சிந்துபாத் மாதிரி ஒரு படக்கதை, பின் முக்கியமானவர்களைப் பற்றி சில குறிப்புகள் என்று அசத்துகிறார்கள். வாரப்பத்திரிகைகளில் வரும் தொடர் கட்டுரைகளையும் கொண்டு வருகிறார்கள்.  முக்கியமாக சனிக்கிழமைகளில் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.  ஓரளவு எழுத்தாளர்களை மதிக்கும் பத்தரிகைகளாக தமிழ் இந்துவையும, தினமணியையும் கருதுகிறேன்.  

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 8

அழகியசிங்கர்    பரம ரகசியம் குவளைக் கண்ணன் என் அப்பா ஒரு சும்மா இது அவர் இறந்து பல வருடங்கள் கழித்து இப்போதுதான் தெரிந்தது அதுவும் நான் ஒரு சும்மா என்பது தெரிந்தபிறகு வெவ்வேறு தொழில்களில் பொருளீட்டும் நண்பர்கள் உண்டெனக்கு அவர்களின் வாழ்வுமுறை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது புதிய நண்பர்களும் கிடைக்கிறார்கள் அனைவருடனான எனது அனைத்துத் தொடர்பும் உறவும் சும்மாவுடனான சும்மாவுடையது நான் சும்மாவுக்குப் பிறந்தவன் என்பதாலும் சும்மா என் பிறவிக் குணமாக இருப்பதாலும் சும்மாவில் வாழும் சும்மா நான் என்பதாலும் இப்படி இருக்கிறதாக இருக்கும் நன்றி : பிள்ளை விளையாட்டு - கவிதைகள் - குவளைக் கண்ணன் - விலை ரூ.40 - பக் : 80 - முதல் பதிப்பு : டிசம்பர் 2005 காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் - போன் : 04652 - 278525

விபத்தும் மீட்பும்

சிறுகதை பிரபு மயிலாடுதுறை சிதம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழ் பெறுவதற்காக காத்திருந்த கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன்.சான்று வழங்கும் எழுத்தர் இன்னும் இருக்கைக்கு வரவில்லை.நேரம் காலை பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது.அடுத்தடுத்த வேலைகள் மனதில் எழுந்தவாறு இருந்தது.சிதம்பரத்தில் வசிக்கும் ஒரு நண்பன் அவனுடைய பூர்வீக சொத்தை விற்பனை செய்ய இச்சான்றிதழைப் பெறுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டான்.புதுதில்லியில் அவனும் அவன் மனைவி குழந்தைகளும் வசிக்கின்றனர்.ஆருத்ரா தரிசனத்துக்கு மட்டும் ஆண்டுக்கொரு முறை குடும்பத்துடன் வருவான்.அவனது வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளான்.பத்திரப் பதிவு அலுவலகத்தில் வழங்கப்படும் சான்றிதழை அவன் சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் தரச் சொல்லியிருக்கிறான்.எழுத்தர் மிகவும் அசிரத்தையுடன் ஒவ்வொரு பெயராக அழைத்தார்.ராமகிருஷ்ணன் ராஜ்குமார் என என்னுடைய பெயர் அழைக்கப்பட்டதும் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன்.சொத்தைப் பொருத்து யாதொரு வில்லங்கமும் இல்லை என்ற சான்றிதழ் தரப்பட்டது.தெற்கு வீதியில் இருந்த நண்பனின் உறவினர் வீட்டுக்க