Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 51


அழகியசிங்கர்  


சாலைக் குயில்           



நோயல் ஜோசப் இருதயராஜ் 


ஒரு பஸ்ஸிலிருந்து குதித்து
மறு பஸ்ஸ÷க்கு ஓடிக் கொண்டிருந்தேன்.
ஒரே இரைச்சல்;
சைலன்சர் கழட்டிய மோட்டார் சைக்கிள்.
ஏர் ஹார்ன்கள், போலீஸ் பொறுக்கி விசில்கள்,
ஹோட்டல் ரேடியோ, கேசட் லைப்ரரி ஸ்டீரியோக்கள்,
கைதட்டல் அழைப்புகள்,
சினிமா அரசியல் சேம விசாரங்கள்

திடீரென ஓர் ஸ்வபரம்;
குக்கூ குக்கூ
சாலை ஆலக்கிளை ஒளிவில்
அமர்ந்த கடவுள் குரல்.

ஞானம் விளித்தது
சந்தியில்
நானே செவியுற்றேன்,
கால் மனம் அற்றேன்
உள்மன முடுக்குகளில்,
ஞாபகத்தின் ஒருவழிகளில்
வெறிகள், நிராசைகள்
நெரிந்து மோதி
நின்றன
ஒரு நொடிக்குள்
அந்த ஈரசைச் சந்த எதிரொலி எங்கெங்கும்.
மறு நொடி
சந்தடி

நன்றி : மறுமொழி - கவிதைகள் - நோயல் ஜோசப் இருதயராஜ் -  முதல் பதிப்பு : ஜøலை 1997 - பக்கங்கள் : 80 - விலை : 30  - வெளியீடு : ரூபி பெலிசியா வெளியீடு, 63/64 மூன்றாம் குறுக்குத் தெரு, சுந்தர் நகர், மீட்டர் பாக்டரி ரோடு, திருச்சிராப்பள்ளி - 620 021  




Comments