Skip to main content

Posts

Showing posts from October, 2017

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில் - 5

அழகியசிங்கர் 1. நீங்கள் யார்? ரமணர்தான் நான் யார் என்ற விசாரணையில் இறங்கினார்.  என்னைப் பார்த்து நீங்கள் யார் என்று கேட்டால் என்ன அர்த்தம்.  நான் உங்களைக் கேட்கிறேன். நீங்கள் யார்? 2. இப்போது என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்? தமிழவனின் ஆடிப்பாவைபோல என்ற நாவலில் 204வது பக்கம் படித்துக்கொண்டிருக்கிறேன்.  அந்த நாவலில் வரும் காந்திமதி என்ற பெண்ணைப் பார்க்க விரும்புகிறேன். 3.  யாருக்கு இந்த முறை சாகித்திய அக்காதெமி பரிசு கிடைக்கும். யாருக்கு என்று தெரியாது.  ஆனால் பலர் க்யூவில் நின்று கொண்டிருக்கிறார்கள். 4. உங்கள் பத்திரிகையில் வரும் கதை, கவிதை, கட்டுரையை யாரெல்லாம் படிக்கிறார்கள்.  யாரெல்லாம் என்பது தெரியாது.  ஒருவர் நிச்சயமாகப் படிக்கிறார். அது நான்தான். 5. துயரத்தின் உச்சம் என்ன? இன்னொரு துயரம். 6. நின்றுகொண்டே வாசிக்கப் போவதாக ஒரு திட்டம் வைத்திருக்கிறீர்களே? ஆமாம்.  கடந்த சில ஆண்டுகளாக நான் தரையில் அமருவதில்லை.  தரையில் பாயைப் போட்டுக்கொண்டு படுத்துக்கொள்வதுமில்லை.  டைனிங் டேபில் வந்தபிறகு தரையில் அமர்ந்து சாப்பிடுவது

நீங்களும் படிக்கலாம் - 32

அழகியசிங்கர் பின் நவீனத்துவம் என்றால் என்ன? என்ற பெயரில் சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் 'எம் ஜி சுரேஷ்' ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.  அப் புத்தகத்தை எல்லோரும் வாங்கி வாசித்து அறிவை விருத்திச் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  நான் இதுவரை படித்த இதுமாதிரியான கோட்பாடு ரீதியாக எழுதப்பட்ட புத்தகங்களில் தெளிவாக எழுதப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று. உண்மையில் இது ஒரு பாடப் புத்தகம் என்று கூட சொல்லலாம்.  தமிழ் இலக்கியம் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் இதுமாதிரியான புத்தகத்தைப் படிப்பது அவசியம் என்றும் நினைக்கிறேன். இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து எம் ஜி சுரேஷ் பின் நவீனத்துவத்தைப் பற்றி எழுதிக்கொண்டு போகிறார்.   போமோ என்றால் என்ன என்று சுரேஷ் முதலில் ஆரம்பிக்கிறார்.  போமோ என்கிற இந்த இரண்டெழுத்துப் பதம் போஸ்ட் மாடர்னிசத்தைக் குறிக்கிறது. போஸ்ட் மாடர்னிசம் என்று அழைக்கப்படும் பின் நவீன்த்துவத்துக்கு இப்போது வயது முப்த்தியெட்டு ஆகிறது என்கிறார். நான் உடனே உங்களை 'அதிகாரமும் பின் நவீனத்துவமும்' என்ற ஒன்பதாவது அத்தியாயத்திற்கு அழைத்துக்கொண்டு ப

கவிதையைப் பற்றிய சில சிந்தனைகள்...1

அழகியசிங்கர் 1. எப்படி கவிதையைப் புரிந்து கொள்வது? மனதால்தான் புரிந்துகொள்ள முடியும் 2. ஒரு கவிதையை கவிதையா என்பது எப்படித் தெரிந்து கொள்வது? கவிதையைப் படித்துப் புரிந்துகொள்வதுதான் ஒரே வழி.  கவிதையைப் படிக்கப் படிக்க மனம் பக்குவம் அடையும்.  மனம் பக்கவமடைந்தால் கவிதையும் புரியும். 3. ஒரு கவிதை சரியில்லை அல்லது சரி என்று எளிதாக சொல்லிவிடலாமா? சொல்லி விடலாம். 4. ஆனால் சரியில்லாத கவிதை என்று எதுவுமில்லை இல்லையா? சரியில்லாத கவிதை என்று எதுவும் இல்லை.  படிக்கிற மனதிற்கு கவிதை எப்படி ஏற்றுக்கொள்ளப் படுகிறது என்பதுதான் முக்கியம். 5. கவிதை நூலிற்குப் பரிசு கொடுப்பது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? ஒரே ஒரு புத்தகத்திற்குத்தான் பரிசு கொடுக்க முடியும்.  அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிற புத்தகம் எந்த அளவிற்கு மற்ற கவிதைப் புத்தகங்களை விட சிறப்பாக இருக்க முடியும் என்று கண்டுபிடிப்பது சிரமம். 6. ஏன் கவிதைப் புத்தகங்கள் விற்க முடியவில்லை? ஏகப்பட்ட கவிதை புத்தகங்கள் வெளிவருவதால், எந்தப் புத்தகம் வாங்கி வைத்துக்கொள்வது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. 7.  கவிதையைப் படிப்பதால்

அசோகமித்திரனின் காந்தியைப் பற்றி ஒரு கவனம்

அழகியசிங்கர்  அசோகமித்திரனின் காந்தி கதை அவருடைய மற்ற எல்லாக் கதைகளை விட வித்தியாசமான கதை என்று எனக்குத் தோன்றுகிறது.  ஒருவர் இக் கதையைப் படிக்கும்போது ஒருவருக்கு இயல்பாக தோன்றக் கூடியது, இக் கதை காந்தியைப் பற்றிய கதையா அல்லது இரு நண்பர்களைப் பற்றிய கதையா அல்லது ஒரு ஓட்டலில் சர்க்கரைப் போடாத காப்பியை குடிக்காமல் வைத்துக்கொண்டிருக்கும் ஒருவரின் கதையா என்ற சந்தேகம் எழாமல் இருக்காது.  இக் கதையை இப்படி மூன்று விதமாக யோசிக்கலாம்.  ஒருவர் ஒரு காபி சாப்பிட ஒரு  அசைவ ஹோட்டலுக்கு வருகிறார்.  காபி ஒன்றை ஆர்டர் செய்கிறார்.  அந்தக் காபியில் சர்க்கரை வேண்டாம் என்கிறார்.  பின் அதைக் குடிக்காமல் வைத்துக்கொண்டிருக்கிறார். கதை ஆரம்பத்தில் இப்படி ஆரம்பிக்கிறது.   'அன்று காபி அவனுக்கு மிகவும் கசப்பாக இருந்தது.  கசப்பு அவனுக்கு என்றுமே பிடித்தமானதொன்று.' இப்படி ஆரம்பிக்கிற இக் கதை காப்பியைப் பற்றி முதலில் மட்டும் சொல்லிவிட்டு கதை நடுவில், 'ஒரு இடத்தில் காபிக் கோப்பை மீது உட்கார வந்த ஒரு ஈயைச் சட்டென்று விரட்டினான்.  அரைக் கோப்பை அளவு மிஞ்சியிருந்த காபிமீது லேசாக ஏடு

புத்தக அறிமுகம் 1

அழகியசிங்கர்   அழகியசிங்கரின் இரண்டாவது கவிதைத் தொகுதியின் பெயர்தான் வினோதமான பறவை என்ற கவிûத் தொகுதி.  ஆரம்பத்திலிருந்து வெளியிடப்பட்ட சிறு சிறு கவிதைத் தொகுதிகள் ஆன யாருடனும் இல்லை, தொலையாத தூரம் எல்லாம் ஒன்றாக்கி அழகியசிங்கர் கவிதைகள் என்ற தொகுதியை 2006ஆம் ஆண்டு கொண்டு வந்துள்ளார்.  அதைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட தொகுதிதான் 2013ல் வெளிவந்த வினோதமான பறவை என்ற தொகுப்பு.  70 கவிதைகள் கொண்ட தொகுப்பு நூல் இது. 110 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ. 80.   மாடுகள் வழியை மறித்துக்கொண்டு நின்ற மாடுகளிடம் கேட்டேன் : போகட்டுமா என்று... நீ நகரப் போகிறாயா நாங்கள் நகர வேண்டுமா என்றன அவைகள் வால்களை ஆட்டியபடி 

மலர்த்தும்பியும் நானும்

மலர்த்தும்பியும் நானும் அழகியசிங்கர் 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பத்திரிகை உதயமானது.  மலர்த்தும்பி என்பதுதான் அந்தப் பத்திரிகையின் பெயர்.  பெயரைப் பார்க்கும்போது இது ஒரு சிறுவர் பத்திரிகை போல் தோன்றும்.  உண்மையில் இது இலக்கியப் பத்திரிகை.  32 பக்கங்களில் க்ரவுன் அளவில் பத்திரிகை முடிந்து விடும்.  அதில் கவிதைகள் கதைகள் எல்லாம் உண்டு.  இதன் ஆசிரியர் ஸ்ரீதர்-சாமா என்கிற என் ஒன்றுவிட்ட சகோதரர்.   இதில்தான் முதன்முதலாக என் கவிதைகள் பிரசுரமாயின.  அக் கவிதைகளை இப்போது எடுத்துப் படிக்குமபோது ஆச்சரியமாக இருக்கிறது.       இந்த மலர்த்தும்பியைத் தொடர்ந்துதான் என் பயணம் சிறுபத்திரிகைகளுடன்  ஆரம்பித்தது.   எதிர்பாராதவிதமாய் இந்தப் பத்திரிகை என் கண்ணில் தட்டுப்பட்டது.  என் ஆசைக்கு ஒரு 32 பிரதிகள் அச்சடித்து வைத்தக்கொண்டேன். 1979ல் இப் பத்திரிகையின் விலை ரு.50 காசு.   இப்போது அச்சடித்த இந்தப் பத்திரிகையின் விலை ரூ.9.  இதோ என் கவிதைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.  இக் கவிதைகளை என் இயல்பான பெயரில் வெளியி0ட்டுள்ளேன். முதல் கவிதை : ஆயிரம் ஜென்மங

திருவாசகமும் நானும் - ஒளிப்படம் 3

அழகியசிங்கர் இது மூன்றாவது உரை.  முதல் இரண்டு உரைகளை ரசித்தவர்கள் இதையும் ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.   இந்த உரையைக்  கேட்பவர்கள் திருவசாகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தால், இந்தக் கூட்டம் நடத்துவதற்கான அர்த்தத்தைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.  

திருவாசகமும் நானும் - ஒளிப்படம் 2

அழகியசிங்கர் இதோ இரண்டாவது ஒளிப்படத்தை இப்போது அளிக்கிறேன்.  கூட்டத்திற்கு வர முடியாதவர்கள் இதைப் பார்த்து ரசிக்கலாம்.  கூட்டத்திற்கு வந்திருந்தவர்களும் இதை இன்னொரு முறை  ரசிக்கலாம்.   முடிந்தால் உங்கள் கருத்துக்களைக் குறிப்பிடவும்.

திருவாசகமும் நானும் - ஒளிப்படம் 1

அழகியசிங்கர் திருவாசகமும் நானும் என்ற தலைப்பில் நேற்று (21.10.2017)  சந்தியா நடராஜன் நிகழ்த்தியக் கூட்டத்தின் முதல் பகுதியை இப்போது அளிக்கிறேன். ஒரு சமயச் சொற்பொழிவு மாதிரி இல்லாமல், திருவாசகம் என்ற பாடல்களை அலசி ஆராய்ந்த சொற்பொழிவாக இருந்தது.   இதைக் கேட்பவர்கள் அவர்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.  

200 கூட்டங்கள் நடத்தி முடித்திருப்பேன்..

அழகியசிங்கர் நான் இதுவரை 200 கூட்டங்கள் நடத்தியிருப்பேன்.  1988ஆம் ஆண்டிலிருந்து விருட்சம் தொடங்கியதிலிருந்து கூட்டங்கள் நடத்தி வருகிறேன்.  ஆனால் நான் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தவில்லை.  நான் பதவி உயர்வுப் பெற்று பந்தநல்லூர் என்ற ஊருக்குப் போனபின் கூட்டங்கள் நடத்தவில்லை.  ஏன் நான் திரும்பவும் சென்னை மாற்றல் ஆகி வந்தபிறகு திரும்பவும் கூட்டங்களை நடத்திக்கொண்டு வருகிறேன்.  கூட்டம் என்பது ஒரு இனிமையான பொழுதைக் கழிக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.  அதற்கான முயற்சியைத்தான் செய்துகொண்டு வருகிறேன். கூட்டத்தில் பேசுபவரும், கூட்டத்திற்கு வருகை தருபவர்களையும் நான் முக்கியமாகக் கருதுகிறேன்.  நாளை நடைபெறும் கூட்டத்திற்கு எல்லோரும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியம முக்கியப் பங்கு வகிக்கிறது.

அழகியசிங்கர் நானும் நட்ராஜனனும் தினமும் காலையில் நடை பயிற்சி செய்து கொண்டிருப்போம்.  ஒரு நாள் அவர் திருவாசகத்தைப் பற்றிப் பேச அது குறித்து ஆழ்ந்தத் தேடல் அவரிடம் உருவாகியது.  உடனே நானும் என் புத்தக நூல் நிலையத்திலிருந்து திருவாசகப் புத்தகங்களைத் தேடினேன்.  சுவாமி சித்பவானந்தர் திருவசாகம் எனக்குக் கிடைத்தது. திருவாசகத்தை போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்துள்ளார்.  நடராஜன் போப் எழுதிய ஆங்கில பிரதியைப் படிக்க ஆரம்பித்தார்.  போப்பின் சிறப்பான மொழி ஆற்றலை அறிந்து நட்ராஜனுக்கு ஆச்சரியம். உண்மையில் பரவசம் அடைந்து விட்டார்.  பக்தி இலக்கியம் நம் வாழ்க்கைக்குத் தேவையா என்ற கேள்வியைக் கேட்டு அவரை மடக்குவேன்.  அவர் அதற்கெல்லாம் பதில் சொல்லி என்னை அடக்கி விடுவார். சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் உரையாடலில் பலரும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். 

அழைப்பிதழைப் பார்க்கவும்

அழகியசிங்கர் தொடர்ந்து விருட்சம் கூட்டம் மூன்றாவது சனிக்கிழமை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறேன். கூட்டத்திற்கு வந்திருந்து ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு நன்றி. கூட்டத்தின் முக்கிய நோக்கம். ஒருவரை ஒருவர் சந்திக்கிறோம். கருத்து பரிமாற்றம் செய்து கொள்கிறோம் என்பதைத் தவிர ஒன்றுமில்லை. இதோ அழைப்பிதழ்.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 30

திருவாசகமும் நானும் சிறப்புரை : சந்தியா நட்ராஜன் இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம் மூகாம்பிகை வளாகம் (4 லேடீஸ் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 (சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) தேதி 21.10.2017 (சனிக்கிழமை) நேரம் மாலை 6 மணிக்கு பேசுவோர் குறிப்பு : தமிழ் அறிஞர், மொழி பெயர்ப்பாளர், பதிப்பாளர் அனைவரும் வருக, அன்புடன் அழகியசிங்கர் 9444113205

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 79

அழகியசிங்கர்   அடகுக் கடை பத்மஜா நாராயணன் எல்லா அடகுக் கடையுள்ளும் எப்போதும் ஒரு பெண் எதையாவது அடகுவைக்க காத்திருக்கிறாள். அது அவள் புன்னகையாக நிச்சயம் இருக்காது விற்றுவிட்ட ஒன்றை அவள் எப்படி திருப்பிவைக்க இயலும்? சிலநேரம் அதிகாலையில் அடகுக்கடைக்குச் செல்பவள் ஏதோ ஒன்றை திருப்பத்தான் சென்றிருப்பாள் அப்போது அவள் தொலைத்த புன்னகையை அக்கடைக்காரன் கொசுறாக அவளிடம் கொடுத்துவிடுகிறான். மற்றோர் இரவு மீண்டும் அங்கு வரும் வரையில் அவள் அதை சுமந்துகொண்டு அலைகிறாள் எது எப்படியிருந்தும் இரவு நேரங்களில் அடகுக் கடை ஏகும் பெண்களின் எண்ணிக்கை குறையவே போவதில்லை அவர்களின் துயரைப் போலவே! நன்றி : தெரிவை - கவிதைகள் - பத்மஜா நாராயணன் - மொத்தப் பக்கங்கள் : 64 - வெளியீடு : டிசம்பர் 2013 - விலை : ரூ.50 - வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிட் - 6 முனுசாமி சாலை, மேற்கு கே கே நகர், சென்னை 600 078 - தொலைபேசி : 044 - 65157525

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் - 7

அழகியசிங்கர் பொதுவாக இலக்கியக் கூட்டங்கள் நடத்தினால் அவற்றைப் பதிவு செய்ய வேண்டுமென்று நினைப்பேன்.  பல கூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.  காசெட் ரிக்கார்டு ப்ளேயர் மூலம் தெற்கு மாட வீதி திருவல்லிக்கேணியில் நடந்த பல கூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.  அப்படிப் பதிவு செய்யும்போது, சத்தமாக கார் ஓடும் சத்தம், ஆட்டோ சத்தம் என்று பல சத்தங்களும் பின் புலமாக பேச்சின் நடுவில் கேட்கும்.  உருப்படியாக இரண்டு கூட்டங்களின் ஆடியோவை அளித்து உள்ளேன்.  ஒன்று சுந்தர ராமசாமியின் பேச்சு.  இன்னொன்று தமிழவன் கூட்டத்தின் பேச்சு. நான் நடத்திய கூட்டத்திலேயே சிறந்த முயற்சி அசோகமித்திரனின் இந்த ஒளி-ஒலி படம்தான்.  சிறப்பாக க்ளிக் ரவி படமெடுத்துக் கொடுத்திருக்கிறார்.  அவருக்கு நன்றி.  8 பகுதிகளாக உள்ள இதில் 6 பகுதிகளை ஏற்கனவே உங்களுக்கு அளித்து விட்டேன்.  7வது பகுதியை இப்போது அளிக்கிறேன். எல்லோரும் பார்த்து ரசிக்ýகும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இதேபோல் ந பிச்சமூர்த்தியின் 100வது ஆண்டு விழா ஒளிப்படமும் உள்ளது.  ஆனால் அசோகமித்திரனின் ஒளிப்படம்போல் அவ்வளவாய் சிறப்பாக வராத படம் அது. 

ஒரு நாடகத்தைப் படிக்க வேண்டுமா மேடையில் பார்க்க வேண்டுமா..........

. அழகியசிங்கர் சமீபத்தில் என் நண்பர் ஆடிட்டர் கோவிந்தராஜன் என்னை ராமானுஜர் என்ற நாடகத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.  இந்த நாடகத்தை எழுதியவர் இந்திரா பார்த்தசாரதி.  நான் பொதுவாக நாடகமோ சினிமாவோ இப்போதெல்லாம் பார்ப்பதில்லை.  முதலில் ஒரு அரங்கத்தில் உட்கார்ந்துகொண்டு  சினிமாவையோ  நாடகத்தையோ பார்க்க முடியுமாவென்று  என்னைச் சோதித்துக் கொள்கிறேன்.  என்னால் உட்கார முடிகிறது.  ரசிக்கவும் முடிகிறது.  ஆனால் சினிமாவும் நாடகமும் என்னை சோதிக்காமல் இருக்க வேண்டும்.  நாரதகானசபாவில் ஆறாம்தேதி இந்த நாடகத்தைப் பார்த்தேன். இந்த நாடகத்தைத் தயாரித்தவர்கள் ஷரத்தா என்ற நாடகக் குழுவினர்.  நாடகத்தைப் பார்த்து அசந்து விட்டேன்.  கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட நடிகர்களைக்கொண்டு நாடகத்தை இயக்கி உள்ளார்கள். அரங்கத்தின் ஒரு மூலையில் இசை நிகழ்ச்சி நடப்பதுபோல் ஒரு குழு அமர்ந்து இசைக்க நாடகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நாடகத்தை ஜி கிருஷ்ணமுர்த்தி இயக்கி உள்ளார்.  நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் ஒன்று தோன்றியது.  இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் என்ற நாட

ஏன் என்று தெரியவில்லை?

அழகியசிங்கர் தமிழ் ஹிந்துவைப் புரட்டிப் பார்த்தேன்.  ஞ:ôனக்கூத்தன் பிறந்த நான் இன்று.  எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.  சில ஆண்டுகளுக்கு முன்.. ஞாயிற்றுக்கிழமை என்று நினைக்கிறேன்.   :ஞானக்கூத்தன் எங்களைப் பார்க்க கடற்கரைக்கு வந்திருந்தார்.  ஞானக்கூத்தன் ஒன்று சொன்னார் : "எனக்கு இன்று பிறந்த நாள்," என்று.  வாழ்த்துத் தெரிவித்தோம்.  பின் இன்னொன்றும் சொன்னார் üஇந்தப் பிறந்தநாள்போது வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னாராம்.  ஆண்டவன் இன்றுவரை உயிரோடு விட்டு வைத்திருக்கிறானாம்.  அவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமென்று.  இதைக் கேட்டவுடன் வீட்டில் உள்ளவர்கள் கலங்கி விட்டார்கள்," என்று.  அன்று முழுவதும் ஞானக்கூத்தன் சொன்னது என் ஞாபகத்தை விட்டுப் போகவில்லை. என் அப்பா பாட்டியெல்லாம் பிறந்த நாள் கொண்டாடியதில்லை. அவர்களுக்கே தெரியாது..எப்போது பிறந்தோம் என்று..எனக்குக் கூட பல ஆண்டுகளாக பிறந்த நாள் எப்போது வருகிறது என்பது தெரியாது..உண்மையில் என் பெண்ணின் பிறந்தநாளை கொண்டாடிய பின்தான் என் பிறந்தநாள் ஞாபகம் வந்தது.   ஒரு முறை என் பெண் பிறந்த நாளை வீட்டில் கொண்டாட கேக்கெல

ஏன் இந்தக் கூட்டம்?

அழகியசிங்கர் வழக்கம்போல் நவீன விருட்சம் 103வது இதழை எடுத்துக்கொண்டு போய் வைதீஸ்வரனிடம் கொடுத்த போது, அவர் மொத்தக் கவிதைகள் அடங்கிய தொகுப்பான மனக்குருவி என்ற கவிதைத் தொகுதியை என்னிடம் நீட்டினார்.  திரும்பத் திரும்ப அவர் முன் அப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன்.  பல ஓவியங்களுடன் 366 கவிதைகள் அடங்கிய தொகுப்பு அது. சனிக்கிழமை வைதீஸ்வரன் சிட்னி செல்கிறார்.  திரும்பி வர இரண்டு மூன்று மாதங்கள் மேல் ஆகும்.  உடனே எனக்குத் தோன்றியது, இப் புத்தகத்தை எல்லோருக்கும் அறிமுகப் படுத்தி கவிதைகள் வாசிப்பது என்று.   இக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு டாக்டரிடம் கேட்டுக் கொண்டேன். டாக்டரும் கூட்டம் ஏற்பாடு செய்ய தயாராய் இருந்தார்.  இந்தத் தருணத்தில்தான் புத்தகம் கொண்டு வந்த பதிப்பாளர் லதாவால் கலந்துகொள்ள முடியாது என்று தெரிந்தது.   லதா வர முடியவில்û9ல என்றால் கூட்டம் நடத்த வேண்டாமென்று தோன்றியது.  தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன்  வைதீஸ்வரனைப் பார்த்துவிட்டு கூட்டம் நடத்தாமல் விட்டுவிடலாமென்று தோன்றியது.  திங்கள் கிழமை கிருபானந்தன் எனக்கு போன் செய்து, எப்படியாவது வைதீஸ்வரன் கூ

சென்னையில் மூன்று கவிஞர்களும் விருட்சமும்..

அழகியசிங்கர் விருட்சம் ஆரம்பித்தபோது மூன்று கவிஞர்கள் சென்னையில் இருந்தவர்கள் விருட்சத்துடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். ஒருவர் ஞானக்கூத்தன், இன்னொருவர் பிரமிள், மூன்றாமவர் வைதீஸ்வரன். இந்த மூன்று கவிஞர்களும் விருட்சத்தில் கவிதைகள் எழுதி உள்ளார்கள்.  பிரமிள் கவிதை மூலம் யாரையாவது திட்டி எழுதியிருந்தால், அதைப் புரிந்துகொள்ளாமலேயே நான் பிரசுரம் செய்திருக்கிறேன்.  ஒரு முறை முதல் இதழ் விருட்சத்தில் நான் பிரமிளை கவிதைத் தரும்படி கேட்டேன்.  அவர் ஒரு கவிதையைப்  மனசிலிருந்து சொல்ல  என்னை எழுதச் சொன்னார்.  அந்தக் கவிதையின் பெயர் கிரணம். அவர் சொல்ல சொல்ல நான் எழுதினேன்.  அந்தக் கவிதை இதுதான் : விடிவுக்கு முன் வேளை ஆகாயத்தில் மிதக்கின்றன நாற்காலி மேஜைகள் ஊஞ்சல் ஒன்று கடல்மீது மிதக்கிறது அந்தரத்து மரச் சாமான்களைச் சுற்றிச் சுற்றிப் பறக்கிறது அசிரீரிக் கூச்சல் ஒன்று சிறகொடித்து கிடக்கிறது ஒரு பெரும் கருடப் பட்சி கிழக்கு வெளிறிச் சிவந்து உதித்த மனித மூளைக்குள்  வெறுமை ஒன்றின் இருட் குகை குகைக்குள் கருடச் சிறகின் காலை வேளைச் சில

விருட்சமும் டிஸ்கவரி புத்தக பேலஸ÷ம் சேர்ந்து நடத்தும் கூட்டம்

வைதீஸ்வரனின் பிறந்த நாள் போன மாதம் 22ஆம் தேதி நடந்துள்ளது.  இதை ஒட்டி லதா ராமகிருஷ்ணன் மனக்குருவி என்ற வைதீஸ்வரனின் முழுத் தொகுப்பை கொண்டு வந்துள்ளார்.  1961 ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை வைதீஸ்வரன் எழுதிய கவிதைகள் மட்டுமல்லாமல், அவருடைய அற்புதமான ஓவியங்களும்  கொண்ட தொகுப்பு இது.  ஒவ்வொருவரும் வாங்கிப் பாதுகாக்க வேண்டிய தொகுப்பு.  ரூ.450 கொண்ட இப்புத்தகத்தை நாளை மட்டும் சலுகை விலையில் தர உள்ளோம்.   வருகிற ஆறாம் தேதி வைதீஸ்வரனும், அவர் மனைவியும் சிட்னி செல்கிறார்கள்.  அவர்கள் அடுத்த ஆண்டு திரும்பி வர உள்ளார்கள். அவருடைய பிறந்தநாளை ஒட்டியும், அவருடைய முழுத் தொகுதியை ஒட்டியும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம்.  அவர் கவிதைகளை அவருடைய நெருங்கிய நண்பர்கள், வாசகர்கள் வாசிக்க உள்ளார்கள். அதாவது கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் அவருடைய கவிதைகளை வாசித்து அவரைப் பெருமைப் படுத்துகிறோம். இக் கூட்டம் நாளை மாலை 6 மணி சுமாருக்கு நடக்க உள்ளது. இக் கூட்டத்தில் வைதீஸ்வரனும் பங்கு கொள்கிறார்.  அவர் முன்னிலையில் அவருடைய கவிதைகளையும் அவர் கவிதைகள் குறித்து கருத்துக்களையும் பத

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் - 6

அழகியசிங்கர் பார்ப்பவர்களுக்கு அலுப்பில்லாமல் இருப்பதற்கு இதன் ஒவ்வொரு பகுதியாக வெளியிடுகிறேன்.  இதைத் தவிர இன்னும் இரண்டு பகுதிகள் பாக்கி உள்ளன. இந் நிகழ்ச்சியைக் குறித்து யாரும் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.  ஆனால் பலரிடம் போய் சேர்ந்திருக்கிறது என்பது தெரிகிறது.