Skip to main content

கார்டில் எழுதுகிறேன்

கார்டில் எழுதுகிறேன்

அழகியசிங்கர்



நவீன விருட்சம் இதழ் 103 பிரதிகளை எடுத்துக்கொண்டு மேற்கு மாம்பல தபால் நிலையத்தில் அனுப்பும்போது அஞ்சல் அட்டையைப் பார்த்தேன்.  100 அஞ்சல் அட்டைகளை வாங்கினேன்.  
அஞ்சல் அட்டைகளை சீட்டுக் கட்டுப்போல் புரட்டிக்கொண்டிருந்தேன்.  அஞ்சல் அட்டை என்ற பெயரை கார்டு என்று மாற்றி எழுதவிரும்புகிறேன்.  மன்னிக்கவும். கார்டு வாங்கிவிட்டோம்.  என்ன செய்வது? யோசித்தேன்.  யாருக்காவது கடிதம் எழுதினால் என்ன?  என்ன எழுதுவது?  யாருக்கு எழுதுவது?  என் நண்பர் ஒருவர் ஓராண்டிற்கு மேல் படிக்கிறேன் என்று என்னிடம் புத்தகம் வாங்கி வைத்துக்கொண்டு என் புத்தகத்தைத் திருப்பியும் தராமல் டபாய்த்துக் கொண்டிருக்கிறார்.  அவருக்கு ஒரு கார்டு எழுதினேன்.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்.   எப்படியும் அவருக்கு அதிகம் கடிதம் எழுதும்படி எனக்குத் தோன்றியது.  அதனால் பல கார்டுகள் எழுத நமக்கு சந்தர்ப்பம் கிடைக்குமென்று சந்தோஷமாக இருந்தது.  அப்படியும் அவரிடமிருந்து என் புத்தகம் கிடைக்குமா என்று தெரியவில்லை.  
என் இன்னொரு நண்பர் ஒருவருக்கு üரமண அருள் வெள்ளம்ý என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தேன்.  அவர் படிக்காமல் வைத்துக் கொண்டிருக்கிறார்.    அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.  தயவு செய்து புத்தகம் படிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று.
என்னுடன் பழகிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்குத்தான் நான் கடிதம் எழுத முடியுமென்று தோன்றியது.  ஒரு முதலமைச்சருக்கோ, பிரதம மந்திரிக்கோ கடிதம் எழுதத் தயாராய் இல்û.
சினிமா நடிகருக்கோ சினிமா நடிகைக்கோ கடிதம் எழுத  விரும்பவில்லை.  ஆனால் பத்திரிகைகளுக்கு எழுத விரும்புகிறேன். இன்னும் சில எழுத்தாள நண்பபர்களுக்கு எழுத விரும்புகிறேன். உதாரணமாக ஒரு கவிதை அல்லது கதை அல்லது கட்டுரைûய் படித்துவிட்டு நன்றாக உள்ளது என்று ஒரு வரியாவது எழுத விருப்பம் கொண்டுள்ளேன்.  
கார்டில் எழுத ஆரம்பித்தவுடன் கீழ்க்கண்டவற்றை கண்டு பிடித்தேன்.
1. முதலில் எழுத முடிகிறதா..சிலருக்கு  எழுதும்போது கை நடுக்கம் ஏற்படும்.. எனக்கு அதுமாதிரி எதுவும் இல்லை.
2. என் கையெழுத்துப் புரிகிறதா? புரிகிறது என்றுதான் தோன்றுகிறது  
3. கடிதம் எழுதுவது என்றால் எனக்கு இரண்டு பேர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.  ஒருவர் தி க சி.  இன்னொருவர்    வல்லிக்கண்ணன்.  மணி மணியாக கார்டில் நவீன விருட்சம் பத்திரிகையைப் படித்துவிட்டு எழுதுவார்கள்.  அவர்கள் எல்லோருக்கும் கடிதங்கள் எழுதுவார்கள்.  இப்போது நான் கார்டில் எழுதும்போது அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். 
பதி என்ற எனக்கொரு நண்பர் நுணுக்கி நுணுக்கி கார்டில் எல்லாவற்றையும் எழுதி விடுவார்.  அதேபோல் பிரமிள்.  காலை 10 மணிக்கு என்னைப் பார்த்துப் பேசியிருபப்பார்.  மூன்று மணிக்கு ஒரு கார்டு எழுதி அடுத்தநாள் எனக்கு வரும்.  அசோகமித்திரன் விருட்சத்தில் எதையாவவது பாராட்ட வேண்டுமென்றால் பாராட்டி எழுதுவார்.
ஆரம்ப காலத்தில் நான் கார்டில்தான் விருட்சம் கூட்டத்தைப் பற்றி தெரியப்படுத்தினேன்.
நான் இனிமேல் எப்படியெல்லாம் கடிதம் எழுதப் போகிறேன் என்று தெரியில்லை.  நான் இப்போது எழுதத் துவங்கி உள்ளேன்.  ஆனால் ஒரு கார்டில் முழுவதும் எழுதுவது ஒரு சவால்தான்.  அதுவும் சின்ன சின்ன வாக்கியத்தில். அதனால் சகலமானவர்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால் நீங்களும் கார்டுகள் வாங்கி எல்லோருக்கும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள்.

Comments